சிறை செல்லும் அமைச்சர் பொன்முடி…? சொத்து குவிப்பு வழக்கில் ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு.. டிச.,21ம் தேதி வெளியாகப் போகும் தண்டனை விபரம்..!!

Author: Babu Lakshmanan
19 December 2023, 11:18 am

சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடியை விசாரணை நீதிமன்றம் விடுதலை செய்தது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 1996ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை திமுக ஆட்சி காலத்தில், போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது, வருமானத்திற்கு அதிகமாக ஒரு கோடியே 36 லட்சத்திற்கு சொத்து சேர்த்ததாக அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி மீது லஞ்ச ஒழிப்புத் துறை, 2002ல் வழக்குப்பதிவு செய்தது. விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்த இந்த வழக்கு, வேலூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

வழக்கை விசாரித்த வேலூர் நீதிமன்றம், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை எனவும், போதிய ஆதாரங்கள் இல்லை எனவும் கூறி, பொன்முடியையும், அவரது மனைவியையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில் இதுவரை மேல்முறையீடு செய்யாத நிலையில், குற்ற விசாரணை முறைச் சட்டம் 397வது பிரிவின்படி, விசாரணை நீதிமன்றங்களின் முடிவுகள் சரியா என்பதை ஆய்வு செய்ய வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தானாக முன்வந்து மறு ஆய்வு மனுவை விசாரணைக்கு எடுத்தார்.

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த பிறகு, பல்வேறு கட்ட விசாரணை நடைபெற்றது. அனைத்து கட்ட வாதங்களும் நிறைவடைந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பை வெளியிட்டுள்ளது. வருமானத்திற்கு அதிகமாக ரூ.1.75 கோடி சொத்து சேர்த்த வழக்கின் அமைச்சர் பொன்முடி, அவரது மனைவியை விடுதலை செய்த சிறப்பு நீதிமன்ற தீர்ப்பு ரத்து செய்வதாக நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்துள்ளார்.

சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடியை விசாரணை நீதிமன்றம் விடுதலை செய்தது செல்லாது எனக் கூறிய அவர், அமைச்சர் பொன்முடி வருமானத்திற்கு அதிகமாக 64.90% சொத்து சேர்த்தது நிரூபணமாகியுள்ளதாக தெரிவித்தார். மேலும்,
தண்டனை விபரங்களை டிசம்பர் 21ம் தேதி காலை 10.30 மணிக்கு வெளியிடுவதாகவும், அன்றைய தினம் அமைச்சர் பொன்முடி, அவரது விசாலாட்சி நேரில் அல்லது காணொலி வாயிலாக ஆஜராக நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

  • producers not accept to produce ajith kumar 64th movie அஜித்குமாரின் கண்டிஷனை கேட்டு தெறித்து ஓடும் தயாரிப்பாளர்கள்? அப்படி என்னதான் சொல்றாரு!