வாரிசு அரசியல் தப்பில்ல.. இதுவே ரொம்ப தாமதம்.. உதயநிதி விரைவில் துணை முதலமைச்சர் ஆவார்… அமைச்சர் பொன்முடி நம்பிக்கை!!

Author: Babu Lakshmanan
13 December 2022, 1:43 pm

திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் விரைவில் துணை முதலமைச்சர் ஆவார் என எதிர்பார்ப்பதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது :- பொறியியல் கல்லூரியில் இப்பொழுதுதான் முதல் முறையாக தமிழை பாடமாக அறிமுகம் செய்துள்ளோம். இந்த ஆண்டு முதல் தமிழ் பாடம் நடத்தப்படும்.

தமிழர் மரபு, தமிழர் தொழில்நுட்பம் ஆகிய இரண்டு பாடங்களும் பொறியியல் கல்லூரிகளில் தமிழ் பாடமாக நடத்தப்படும். ஏற்கனவே உள்ள தமிழ் ஆசிரியர்களை பாடம் நடத்த அறிவுறுத்தியுள்ளோம். இன்னும் புதிதாக தமிழர் ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. முழு நேர ஆசிரியர்கள் நியமிக்கப்படும் வரை தற்காலிகமாக ஏற்கனவே உள்ள ஆசிரியர்கள் பாடம் நடத்துவார்கள்.

வெளிநாட்டு மாணவர்களுக்கு இரண்டு பாடங்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து பாடம் நடத்தப்படும். வெளிநாட்டு மாணவர்களும் திராவிட மாடல் ஆட்சியை தெரிந்து கொள்ளும் வகையில் நடத்தப்படும். தமிழ் ஆசிரியர்களை கொண்டே இரண்டு பாடங்களும் நடத்தப்படும்.

PhD, UGC தகுதி பெற்றவர்கள் மட்டுமே இதில் ஆசிரியர்களாக நியமனம் செய்யப்படுவார்கள். நிலுவையில் உள்ள சட்ட மசோதாக்களை ஆளுநர் ஒப்புதல் தருவதற்கு சட்டரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். உதயநிதிக்கு அமைச்சர் பொறுப்பு 1.5 ஆண்டுகள் தாமதம் என கருதுகிறேன்.

திறமை பெற்ற இளைஞர், எல்லாத் துறைகளிலும் திறமைமிக்கவர் உதயநிதி ஸ்டாலின். திராவிட மாடல் ஆட்சியை நடத்துகிற இளைஞராக உதயநிதி ஸ்டாலின் கண்டிப்பாக செயல்படுவார். இதைவிட இன்னும் அதிகமான பொறுப்புகளை ஏற்று வருங்காலத்தில் உதயநிதி செயல்படுவார்

வாரிசு அரசியல் குற்றச்சாட்டு ஒன்றும் புதிது அல்ல. அமைச்சரவை என்பது கூட்டுப் பொறுப்புணர்வு. அனைவரும் இணைந்து செயலாற்றுவோம். உதயநிதி சீக்கிரம் துணை முதல்வர் ஆவார் என நானும் எதிர்பார்க்கிறேன், எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • the reason behind lal salaam movie flop was rajinikanth sir extended cameo said by vishnu vishal ரஜினிகாந்த் ரசிகர்களை சீண்டிப்பார்த்த விஷ்ணு விஷால்! களேபரமான சமூக வலைத்தளம்?