ஏய், நீ.. வா, போ.. என்ன பேச்சு இதெல்லாம் : அமைச்சர் பொன்முடி மன்னிப்பு கேட்கணும்.. இல்ல பதவியில் இருந்து தூக்குங்க : பாஜக பிரமுகர் வலியுறுத்தல்!!

Author: Udayachandran RadhaKrishnan
4 October 2022, 2:16 pm
Minister Ponmudi - Updatenews360
Quick Share

தமிழக பெண்களை தொடர்ந்து அவமதித்து வரும் அமைச்சர் பொன்முடி மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வீரபாண்டி கிராம சபை கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி, ஒன்றிய பெண் கவுன்சிலர் ஒருவரை ஒருமையில் பேசியதோடு, ‘உனக்கும், ஊராட்சித் தலைவருக்கும் உள்ள பிரச்னையை தனியாக பேசிக்கங்க’ என்று சொல்லியதுடன், ‘அப்படியா நீ… ஏய்…’ என்றெல்லாம் ஆணவத்தோடு, அவமரியாதையாக பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

ஏற்கனவே பெண்களை பஸ்சில், ‘ஓசியில் போறீங்க…’ என்று கேவலப்படுத்திய நிலையில், தற்போது ஒரு கவுன்சிலரை அவதுாறாக, அராஜகமாக பேசியுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.பொன்முடி, தமிழ் பெண்களை தொடர்ந்து அவமதித்து, அராஜகமாக ஆதிக்க மனப்பான்மையோடு பேசி வருவதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையேல், முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் பதவியில் இருந்து பொன்முடியை நீக்க வேண்டும்.இவ்வாறு நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.

Views: - 509

1

0