அமைச்சரின் சகோதரர் வீட்டில் ரெய்டு ஓவர்… அலுவலகத்திற்கு விரைந்த அதிகாரிகள் ; கரூரில் 5வது நாளாக சோதனை..!!

Author: Babu Lakshmanan
30 May 2023, 2:00 pm

கரூர் ; அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.

கரூரில் கடந்த 26ம் தேதி தொடங்கிய வருமானவரித்துறை சோதனை ஐந்தாவது நாளாக இன்றும் நடைபெறுகிறது. இந்த நிலையில், கடந்த 26ம் தேதி கரூர் மற்றும் ராயனூர் பகுதிகளில் சோதனைகளைச் சென்ற வருமான வரித்துறை அதிகாரிகளை தடுத்தனர்.

குறிப்பாக, அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் வீட்டில் சோதனை நடத்த சென்ற அதிகாரிகளை திமுகவினர் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக கரூர் மாநகராட்சி கவுன்சிலர் இரண்டு பேர் உட்பட 15க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த நிலையில், கரூரில் ராமகிருஷ்ணபுரம் பகுதியில் அமைந்துள்ள அசோக் குமாருக்கு சொந்தமான அபெக்ஸ் இன்பக்ஸ் அலுவலகத்தில் வருமான வரி சோதனை நடத்தி வருகிறது. இரண்டு கார்களில் வந்த ஆறு அதிகாரிகள் அலுவலக ஊழியரை வரவழைத்து கதவை திறந்து உள்ளே சென்று, முன்பக்க கேட்டை இழுத்து பூட்டிவிட்டு சோதனையிட சென்றுள்ளனர்.

அப்பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

  • producers not accept to produce ajith kumar 64th movie அஜித்குமாரின் கண்டிஷனை கேட்டு தெறித்து ஓடும் தயாரிப்பாளர்கள்? அப்படி என்னதான் சொல்றாரு!