அமைச்சருக்கு தொடர்புடைய இடங்களில் 8வது நாளாக நீடித்த ரெய்டு நிறைவு… முக்கிய ஆவணங்கள் பறிமுதல் ; டெல்லிக்கு பறந்த பரபரப்பு அறிக்கை!!

Author: Babu Lakshmanan
2 June 2023, 6:10 pm

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் கடந்த 8 நாட்களாக நடந்த வருமான வரித்துறை சோதனை நிறைவு பெற்றது.

கரூரில் கடந்த 26ம் தேதி தொடங்கிய சோதனை 8வது நாளாக இன்றும் நடைபெற்றது. அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் குமார் அலுவலகத்தில் தீவிர சாதனையில் ஈடுபட்ட வருமான வரித்துறை அதிகாரிகள், அசோக் குமார் நேரில் ஆஜராக கூறி அவரது வீட்டில் சம்மன் ஒட்டி இருந்தனர். அதற்கு கால அவகாசம் கேட்டு அவர்கள் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

காந்திகிராமம் பகுதியில் அமைந்துள்ள பிரேம்குமார் – சோபனா வீட்டில் தொடர்ந்து தீவிர சோதனை நடத்தி வரும் நிலையில், நேற்று முன்தினம் சோபனாவை அழைத்துக் கொண்டு சின்ன ஆண்டாங்கோவில் பகுதியில் உள்ள அலுவலகம் ஒன்றில் வைத்து சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக துருவி துருவி விசாரணை செய்தனர். இந்த நிலையில் அவரது வீட்டில் நேற்றும் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மேலும், கரூர் வையாபுரி நகர் 4வது கிராஸ் பகுதியில் அமைந்துள்ள ஆடிட்டர் அலுவலகம், சின்ன ஆண்டாகோவில் ஏ.கே.ஜி காலனி பகுதியில் அமைந்துள்ள மளிகை கடை உரிமையாளர் தங்கராஜ் வீடு ஆகிய இடங்களில் துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவப்படை வீரர்கள் பாதுகாப்புடன் தீவிர சோதனை நடத்தப்பட்டது.

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் 8வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். 23 இடங்களில் சோதனை நடைபெற்ற நிலையில், இன்று மேலும் பல இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

இந்த நிலையில், கரூரில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் நடந்து வந்த வருமான வரித்துறை சோதனை நிறைவு பெற்றுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட பணம், ஆவணங்களை அடிப்படையாக வைத்து அடுத்தகட்ட விசாரணையை தொடங்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். அதேவேளையில், சோதனை மற்றும் விசாரணையில் கிடைத்த தகவல் பற்றி டெல்லி தலைமையகத்திற்கு அறிக்கையை வருமான வரித்துறை அனுப்பி வைத்துள்ளனர்.

  • producers not accept to produce ajith kumar 64th movie அஜித்குமாரின் கண்டிஷனை கேட்டு தெறித்து ஓடும் தயாரிப்பாளர்கள்? அப்படி என்னதான் சொல்றாரு!