பிரதமர் இங்கேயே வீடு எடுத்து தங்கினாலும்… பாஜக ஒரு இடத்தில் கூட ஜெயிக்காது : அமைச்சர் உதயநிதி பிரச்சாரம்..!!

Author: Babu Lakshmanan
6 April 2024, 11:29 am

திருவாரூர் ; பிரதமர் மோடி தமிழ்நாட்டிலேயே வீடெடுத்து தங்கி, ஊர் ஊராகச் சுற்றி வந்தால் கூட ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் தெற்கு வீதியில் இந்தியா கூட்டணி சார்பில் நாகை நாடாளுமன்ற தொகுதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் போட்டியிடும் வை செல்வராஜை ஆதரித்து திமுக இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.

மேலும் படிக்க: இந்த கூமுட்டை மக்களுக்கு என்ன செஞ்சீங்க…? வாக்கு கேட்டு சென்ற காங்., எம்பி ஜோதிமணியிடம் கேள்வி எழுப்பிய நபர்!

அப்போது அவர் பேசியதாவது :- திருவாரூர் என்னுடைய ஊர் கலைஞர் என்ற ஒரு உலக வரலாற்றிலேயே தான் நின்ற அனைத்து தேர்தலிலும் வெற்றி பெற்ற ஒரே தலைவர் கலைஞர் மட்டும் தான். உலக வரலாற்றிலேயே சூடு சொரணை அற்ற கேடுகெட்ட ஒரு மானங்கெட்ட அரசியல்வாதி பாதம் தாங்கி பழனிசாமி. சசிகலாவுக்கு நம்பிக்கை துரோகம் செய்தவர். பச்சை துண்டு போட்டவர் என கூறி கொள்ளும் எடப்பாடி பழனிச்சாமி பச்சை துரோகம் செய்தவர்.

மகளிர் கட்டணம் இல்லா பேருந்தான ஸ்டாலின் பஸ் மூலம் மூணு வருடத்தில் 465 கோடி பயணங்களை இலவச பயணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் 3 கோடியே ஏழாயிரம் பெண்கள் பயணங்கள் மேற்கொண்டுள்ளனர். முதலமைச்சரின் காலை உணவு திட்டம் இந்தியாவிலேயே முதல் முறையான திட்டம். திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர்.

மேலும் படிக்க: நள்ளிரவில் பாஜக நிர்வாகி வேலூர் இப்ராஹிம் திடீர் கைது… போலீஸ் வாகனத்தை மறித்து பாஜகவினர் தர்ணா..!!

கஜா புயல், நிஜா புயல் போன்ற பேரிடர்களின் போது வராத பிரதமர், தேர்தல் நேரத்தில் மட்டும் வருகிறார். பிரதமர் மோடி தமிழ்நாட்டிலே வீடெடுத்து தங்கி ஊர் ஊரா சுற்றி வந்தால் கூட ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாது, என தெரிவித்தார்.

இந்த பிரச்சாரத்தின் போது வேட்பாளர் வை செல்வராஜ் மற்றும் திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!