ரூ.10 கோடி எதுக்கு.. 10 ரூபா சீப்பு இருந்தால் நானே என் தலையை சீவுவேன் ; உ.பி. சாமியாருக்கு அமைச்சர் உதயநிதி பதிலடி..!

Author: Babu Lakshmanan
5 September 2023, 11:48 am

என் தலையை சீவினால் ரூ.10 கோடி என்று சாமியார் கூறுகிறார் பத்து ரூபாய் சீப்பு கொடுத்தால் போதும் நானே தலையை சீவி விடுவேன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலகலப்பாக பேசியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட திமுக இளைஞர் அணி செயல் வீரர் கூட்டம், தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை சூசையா புரத்தில் நடைபெற்றது. சமூக நலம், பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் இளைஞர் நலன் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

அப்போது, உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், சமீபத்தில் மதுரையில் அதிமுக மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் வரலாறு பற்றி பேசவில்லை. தமிழகத்தின் பிரச்னை பற்றி பேசவில்லை. ஆடல், பாடல் நிகழ்ச்சி, மிமிக்ரி நிகழ்ச்சி மட்டும் நடத்தப்பட்டது. புளி சாதம், தயிர் சாதம். நீட் கொண்டு வந்தது எடப்பாடி, ஜெயலலிதா இருந்தவரை நீட் தமிழகத்திற்கு வரவில்லை.

தமிழகத்திலிருந்து நுழைவு தேர்வு ரத்து செய்தது டாக்டர் கலைஞர். கிராமப்புறங்களில் ஏழை மாணவர்கள் படித்து மருத்துவராக வேண்டும். ஆனால் அதிமுக ஆட்சியில் பாஜகவுக்கு பயந்து குறுக்கு வழியில் திணிக்கப்பட்டது. இதுவரைக்கும் 21 குழந்தைகள் இறந்துள்ளது. தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்ய முழு முயற்சியில் திமுக செய்து கொண்டு இருக்கிறது.

தமிழ்நாட்டில் முழுவதாக என்றைக்கு ரத்து செய்கிறோமோ, அதுதான் முழு வெற்றி அடுத்த போராட்ட களத்திற்கு தயாராக வேண்டும். அடுத்த போராட்டம் டெல்லியில் இருக்கும் அந்தப் போராட்டத்தில் தயாராக வேண்டும். இந்தியாவே என்னை பற்றி தான் பேசிக் கொண்டு இருக்கிறது. சனாதான ஒழிப்பு மாநாட்டில் சனாதானத்தை ஒழிக்க வேண்டும். எப்படி கொசு மலேரியா, டெங்கு, காலரா, கோவிட்டை ஒழிச்சோமோ, அதேபோல சனாதானத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறினேன்.

நான் சொன்னது நடந்தது இந்தியா முழுக்க உதயநிதி பற்றி தான் பேசிக் கொண்டிருக்கின்றனர். இந்தியா முழுக்க புகார் கொடுக்கப்பட்டிருக்கு. என்னை கைது செய்ய வேண்டும் என்று இன்றைக்கு ஒரு சாமியார் என்னுடைய தலைக்கு விலை வைத்திருக்கின்றார். உதயநிதி தலையை யார் எடுத்துட்டு வர்றார்களோ, அவர்களுக்கு 10 கோடி என்று ஒரு சாமியார் சொல்கிறார். என் தலை மேல் உனக்கு அப்படி என்ன ஆசை.

நீ ஒரு சாமியார் உனக்கு எப்படி பத்து கோடி. நீ உண்மையான சாமியாரா..? இல்ல டூப்ளிகேட் சாமியாரா..? பத்து ரூபாய் சீப்பு கொடுத்தால் நானே சீவி விட்டு போயிடுவேன். இதே போல் கலைஞரின் தலையை சீவினால் ஒரு கோடி ரூபாய் தருவேன் என்று ஒரு சாமியார் கூறினார். 100 கோடி ரூபாய் கொடுத்தாலும் என் தலையை நானே சீவிக்க முடியாது, என்றார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!