கர்காடக காங்கிரசிடம் கை நீட்டி பணம் வாங்கிய அமைச்சர்? அண்ணாமலை சந்தேகத்தால் அரசியலில் பரபர!!

Author: Udayachandran RadhaKrishnan
4 August 2024, 10:33 am

ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அடுத்த ஓடாநிலையில் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் 219வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு பா.ஜ.க மாநிலத்தலைவர் அண்ணாமலை மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை ஆடிப்பெருக்கு அனைவருக்கும் நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்வதாக தெரிவித்தார். 1801 , 1802 , 1803 ம் ஆண்டுகளில் ஆங்கிலேயரை எதிர்த்து போராடி வெற்றி பெற்றவர் தீரன் சின்னமலை என்றும் சுதந்திர போராட்ட வீர்ரக்ளின் பெருமையை் நாம் பேசிக்கொண்டு இருக்க வேண்டும் என்றார்.

அவினாசி அத்திக்கடவு அதிமுக ஆட்சியில் முடிக்கப்பட்ட பணிகள் குறித்து இன்று ஆய்வு செய்வதாகவும் , 99 % கொலைகளுக்கு காரணம் இருக்கும் , ஏன் இப்போது அதிகம் நடக்கிறது , காரணம் காவல்துறை கைகள் கட்டப்ப்பட்டு இருப்பதாகவும் , அடிப்படை காவல்துறையினர் வேலை செய்வதில்லை , காவல்நிலையத்தில் செய்ய வேண்டிய வேலை செய்யவில்லை என்றும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது என்று குற்றம்சாட்டினார்.

கர்நாடகா காங்கிரஸ் அரசிடம் கை நீட்டி பணம் வாங்கனாரா துரைமுருகன் என சந்தேகம் உள்ளதாகவும், ஏனென்றால் காங்கிரஸ் அரசு செய்யும் தவறுகளை ஒரு வார்த்தை கூட துரைமுருகன் பேசவில்லை என்பதால் பணம் வாங்கினாரா எனக்கு சந்தேகம் உள்ளது என்ற அண்ணாமலை மழை வந்ததால் காவிரி பிரச்சனை குறித்து இனி பேச மாட்டார்கள் என்றார்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?