அதிசயம்… நரசிம்மராக மாறிய விநாயகர் சிலை : சென்னை அருகே அபூர்வ காட்சி… திரண்ட மக்கள்.. (வீடியோ)!!

Author: Udayachandran RadhaKrishnan
2 December 2022, 8:14 pm
Vinayagar Narasimmar - Updatenews360
Quick Share

சென்னை போரூர் அருகே நரசிம்மனாக மாறிய விநாயகர் சிலை அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை போரூர் அருகே உள்ள கக்கிலிபேட்டை கிராமத்தில் உள்ள பால விநாயகர் கோவிலில் உள்ள விநாயகர் சிலையின் உருவம் திடீரென நரசிம்மர் உருவமாக மாறியதாக கூறப்படுகிறது.

இதனை அறிந்த அந்த பகுதியில் உள்ள ஏராளமான பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து புகைப்படங்கள் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் பொதுமக்கள் கூறுகையில் இக்கோயில் ஆனது கடந்த 100 ஆண்டு பழமை வாய்ந்த கோயில் என்றும் இதில் திடீரென விநாயகர் சிலை நரசிம்மன் சிலையாக மாறியதால் மிகுந்த ஆச்சர்யத்தில் உள்ளோம் என மக்கள் தெரிவித்துக் கொண்டனர்.

இதுகுறித்து கோயில் அர்ச்சகர் இடம் கேட்ட பொழுது இந்நிகழ்வு சுமார் காலை 11 மணி அளவில் நடந்ததாக பொதுமக்கள் கூறியதாக தெரிவித்தார்.

Views: - 426

0

0