தீரன் சின்னமலையின் 267வது பிறந்தநாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை..!!

Author: Rajesh
17 April 2022, 10:53 am
Quick Share

சென்னை: சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 267வது பிறந்த நாளையொட்டி முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 267வது பிறந்த நாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி கிண்டி திரு.வி.க தொழிற்பேட்டை வளாகத்தில் உள்ள தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து சிலைக்கு கிழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு முதல்மைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழச்சியில் அமைச்சர்கள், சென்னை மேயர், உள்பட அனைவரும் கலந்து கொண்டனர்.

Views: - 416

0

0