கட்சி தாவி வந்தவர்களுக்கே நகராட்சிகளில் பதவி : அமைச்சர் செந்தில்பாலாஜி மீது அதிருப்தி.. 500க்கும் மேற்பட்ட திமுகவினர் ராஜினாமா!!

Author: Udayachandran RadhaKrishnan
3 March 2022, 9:58 pm
Senthil Balaji - updatenews360
Quick Share

கரூர் : அதிமுக, அமமுக கட்சிகளில் பயணித்தவர்களுக்கு மட்டுமே நகரமைப்பு தேர்தலில் தலைவர் பதவியை செந்தில் பாலாஜி கொடுத்ததால் அரவக்குறிச்சி பேரூர் கழக திமுக செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளில் உள்ளிட்ட பொறுப்பாளர் உள்ளிட்ட 50 நபர்கள் உள்ளிட்ட 500 திமுக தொண்டர்கள் திமுக கட்சியிலிருந்து ராஜினாமா செய்ததால் கரூர் அரசியல்வாதிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Dhinakaran loyalist Senthil Balaji joins DMK, praises Stalin's leadership -  The Week

அதிமுக கட்சி, அமமுக கட்சி என்று பல்வேறு கட்சிகளில் இருந்து திமுக கட்சிக்கு வந்தவுடனேயே திமுக மாவட்ட பொறுப்பாளர் மற்றும் எம்.எல்.ஏ பதவியும், அதிலிருந்து அமைச்சர் என்று பதவிகள் பல வாங்கி, பின்னர் கொங்கு மண்டலத்தினை கோட்டை விட்டது திமுக என்று திமுக தலைமையிடம் எடுத்துக்கூறி, திமுக வின் சீனியர்களை ஒதுக்கி கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளரும், தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கோவை மாவட்டத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொண்டார்.

பின்னர் தமிழக அளவில் நகரமைப்பு உள்ளாட்சி தேர்தலில், திமுக மற்றும் அதிமுக கூட்டணி கட்சியினர் அதிக அளவில் வெற்றி பெற்றதை அடுத்து, கொங்கு மண்டலத்தை தன்னால்தான் வளர்ச்சி அடைந்தது என்று கூறி, திமுக கட்சி தலைமையிடம் நல்ல பெயர் எடுத்தார்.

ஆனால் தற்போது அவரது சொந்த மாவட்டத்தில், அதிமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகளிலிருந்து அவரிடம் படித்தவர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்ததோடு, காலம், காலமாக கலைஞர் கருணாநிதி, தற்போதைய முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் மற்றும் அன்பில் பொய்யாமொழி ஆகியோர்களிடம் பயணித்த நிர்வாகிகளை ஓரம்கட்டி, திமுக கட்சியினை சிதைக்க திட்டமிட்டுள்ளார்.

அதற்கு முன்னுதாரணமாக கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பேரூர் கழக நிர்வாகிகள் இன்று கண்கலங்கி தாங்கள் கட்சிப் பொறுப்புகளில் இருந்து விலகி நின்றோம் என்று அரவக்குறிச்சி பேரூர் கழக திமுக செயலாளர் ம.அண்ணாத்துரை தலைமையில், அவைத்தலைவர், துணை செயலாளர், வார்டு செயலாளர்கள் என்று தற்போது கட்சிப் பொறுப்பில் உள்ள 50 நபர்கள் உள்ளிட்ட 500 திமுகவினர் கட்சியிலிருந்து விலகினர்.

இதில் 42 ஆண்டு காலமாக கலைஞர் கருணாநிதி, அன்பில் பொய்யாமொழி உள்ளிட்டோருடன் தற்போதைய திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் உடன் பயணித்த 42 ஆண்டுகால திராவிட அரசியலுக்கு ஒரு மணி மகுடம் சூட்டிய அரவக்குறிச்சி பேரூர் கழகம், இதே செந்தில்பாலாஜி தகுதிநீக்க எம்எல்ஏ வழக்கில் தகுதி நீக்கம் செய்யப்பட்டு திமுகவில் ஐக்கியமாகி, முதன்முதலில் திமுகவில் போட்டியிட்ட இதே அரவக்குறிச்சி தொகுதியில் இவருக்கு பெரும்பான்மை வாக்குகள் வாங்கி கொடுத்த வரும் கொடுத்த நிர்வாகிகளும் இவர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 1127

0

0