மருமகனுக்கு மாமியார் வைத்த பலே விருந்து: மகிழ்ச்சியில் திக்கு முக்காடிய மருமகன்: இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே…!!
Author: Sudha12 ஆகஸ்ட் 2024, 10:49 காலை
புதுமணத் தம்பதிகளை ஆடி மாதத்தில் பிரித்து வைப்பது தமிழக வழக்கம்.அந்த வழக்கத்தை தெலுங்கில் ஆஷாட மாதத்தில் தெலுங்கர்கள் கையாளுகின்றனர்.
தற்போது ஆஷாட மாதம் முடிந்து விட்ட நிலையில் மாமியார் வீட்டில் இருந்த மனைவியை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து செல்ல வந்த கணவனுக்கு அவருடைய மாமியார் நூறு வகை பலகாரங்களுடன் கூடிய விருந்து சாப்பாடு போட்டு அசத்தினார்.
ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள தமரோட கிராமத்தைச் சேர்ந்த ரத்னகுமாரிக்கும், காக்கிநாடாவை சேர்ந்த ரவி தேஜாவுக்கும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது.
கடந்த ஒரு மாதம் ஆஷாட மாதம் ஆகையால் புதுமண தம்பதிகள் சேர்ந்து இருக்க சம்பிரதாய ரீதியாக தடை உள்ளது.எனவே ரத்தினகுமாரி, ரவி தேஜா ஆகியோர் பிரிந்திருந்தனர்.
ஆஷாடம் முடிந்து தற்போது சிராவண மாதம் பிறந்துள்ளது.எனவே மனைவியை அழைத்து செல்வதற்காக ரவி தேஜா கிராமத்தில் இருக்கும் மாமியார் வீட்டிற்கு வந்தார்.
அவருக்கு அவருடைய மாமியார் நூறு வகையான பலகாரங்களுடன் கூடிய விருந்து சமைத்து பரிமாறி அசத்தினார்.
மாமியாரின் இந்த விருந்தால் மருமகன் மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறார்.
0
0