முருகன் மாநாட்டில் பல கோடி முறைகேடு… ரவுடி போல அமைச்சர் பேசியுள்ளார் : பாஜக பிரமுகர் குற்றச்சாட்டு!

Author: Udayachandran RadhaKrishnan
10 September 2024, 4:34 pm

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பாரதிய ஜனதா கட்சி திண்டுக்கல் மேற்கு மாவட்டம் சார்பில் ஆயக்குடி பகுதியில் புதிய உறுப்பினர் சேர்க்கைகாண அட்டைகளை வழங்கும் நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம் கலந்து கொண்டார்.

அப்போது வீடு வீடாக சென்று புதிய உறுப்பினர்களை பாரதிய ஜனதா கட்சியில் இணைத்து அவர்களுக்கு அட்டைகளை வழங்கினார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்ததாவது :- பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெற்றதில் பல கோடி ரூபாய் நன்கொடையாளர்களிடம் பணம் வசூலிக்கப்பட்டுள்ளது, அறநிலைத்துறையிலும் பணம் எடுத்துள்ளனர்.

இதில் பல கோடி ரூபாய் பணம் ஊழல் நடைபெற்றதாக கேள்வி எழுந்துள்ளது இதை வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் எவ்வளவு செலவு செய்தீர்கள் என்ற வெளிப்படையாக வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும், நடிகர் விஜய் திமுக வின் B டீம் ஆக செயல்பட்டு வருகிறார்.

விநாயகர் சதுர்த்தி அன்று திரைப்படத்தை வெளியிட்டு கோடிக்கணக்கில் லாபம் சம்பாதிக்க தெரிந்த நடிகர் விஜய்க்கு, விநாயகர் சதுர்த்தி அன்று மக்களுக்கு வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என தெரியவில்லையா? என பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம் பழனியில் நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியில் பங்கேற்று கேள்வி எழுப்பியுள்ளார்.

2026ல் கூட்டணி என்பது மத்திய தலைமை முடிவு செய்யும் எனவும் ,தமிழக பள்ளிகளில் மாணவர்கள் பாலியல் தொந்தரவுக்கு ஆளாவது வருத்தபடகூடியதாக உள்ளது.

இதில் சிறுவர்கள் தான் அதிகம் ஈடுபடுகின்றனர். நல்ல கல்வியை கல்வி துறை கொடுத்திருந்தால் மாணவர்களுக்கு நல்ல எதிர்காலம் அமையும், அதே போல கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மாவட்டமான திருச்சியிலும் கூட்டி பாலியல் தொல்லையும் தஞ்சாவூரிலும் கூட்டு பாலியல் தொல்லை கொடுரம் நடந்திருப்பது வேதனைக்குரிய விஷயம்.

கொல்கத்தாவை போல திமுக அரசுக்கு எதிராக பொதுமக்கள் வீதிக்கு வரும் காலம் வெகுதூரத்தில் இல்லை என்றும் தெரிவித்துளார்.

சமீபத்தில் நடைபெற்ற கல்லூரியில் பாவ புண்ணியப் பற்றி பேசிய பரம்பொருள் அறக்கட்டளை மகாவிஷ்ணு உடனடியாக கைது செய்ய ப்படுவான் அவனை சும்மா விடமாட்டேன் என்று கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ரவுடி போல் பேட்டி அளிக்கிறார்.

தமிழகத்தில் நடைபெறும் கற்பழிப்பு சம்பவங்களை ஈடுபடும் நான்கு பேரை சுட்டுக் கொண்டிருந்தால் இதுபோன்ற சம்பவம் நடைபெற்று இருக்காது என்றும் தெரிவித்தார்

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!