என் ஆதரவு இபிஎஸ்க்குத்தான் : ஓபிஎஸ்சை ஷாக் ஆக வைத்த கூட்டணி கட்சி தலைவர்!!

Author: Udayachandran RadhaKrishnan
29 January 2023, 12:28 pm
EPS OPS - Updatenews360
Quick Share

ஒற்றை தலைமை மோதல் காரணமாக 4 பிரிவாக அதிமுக உள்ளது. இந்தநிலையில் ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுகவின் சின்னமான இரட்டை இலை சின்னம் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அதிமுகவின் கூட்டணி கட்சியான பாஜக யாருக்கும் ஆதரவு என்ற முடிவு எடுக்காத நிலை உள்ளது. மற்றொரு கூட்டணி கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் எடப்பாடி அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

கொங்கு இளைஞர் கட்சியின் தலைவரான தனியரசு ஓபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இந்தநிலையில் ஓபிஎஸ் அணியை அதிர்ச்சி அடையவைக்கும் நிலையில், மற்றொரு கூட்டணி கட்சியான பெருந்தலைவர் மக்கள் கட்சி தேர்தல் தொடர்பாக ஆதரவு நிலைப்பாட்டை அறிவித்துள்ளது.

இந்தநிலையில், தமிழக அரசு நியாய விலை கடைகளில் சக்கரைக்கு பதிலாக பனைவெல்லம் வழங்குவதாக கடந்த 2022-ஆம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவித்ததாகவும் திமுக அரசு கொடுத்த வாக்குறுதியை இதுவரை நிறைவேற்ற வலியுறுத்தி ராமநாதபுரத்தில் தமிழ்நாடு நாடார் பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு நாடார் பேரவை பொதுச் செயலாளர் என் ஆர் தனபாலன் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு கண்டனத்தை தெரிவித்து முழக்கமிட்டார்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த என்.ஆர் தனபாலன் ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் எங்களின் ஆதரவு எடப்பாடி பழனிச்சாமி அணியினருக்குத்தான் எனவும் எடப்பாடி பழனிச்சாமி ஒரு விவசாயி விவசாயிகளின் நலனில் பெரும் பங்காற்றியவர் என தெரிவித்தார்.

மீண்டும் அவர் ஆட்சியில் இருந்திருந்தால் கல் இறக்குவதற்கு அனுமதி தந்திருப்பார் எனவும் ஆகையால் பெருந்தலைவர் மக்கள் கட்சியினருடைய ஆதரவு எடப்பாடி பழனிச்சாமி அணியினருக்கு தான் என உறுதிப்பட தெரிவித்தார்.

Views: - 101

0

0