69 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டனர்; my V3 ads உரிமையாளர் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி,.

Author: Sudha
26 July 2024, 2:57 pm

விளம்பரம் பார்த்தால் பணம் எனக் கூறி, பிரபலமானது my V3 ads செயலி இதில் வீடியோ பார்த்தால் 5 ரூபாய் முதல் 1500 ரூபாய் வரும் எனகூறி வாடிக்கையாளர்களிடம் மோசடி செய்ததாக கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.இந்த புகார் தொடர்பாக கோவையைச் சேர்ந்த my v3 ads செயலி நிறுவன உரிமையாளர் சக்தி ஆனந்தனின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு புகார், சென்னை பொருளாதார குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கில் ஏற்கனவே நீதிமன்றம் இதன் உரிமையாளர் சக்தி ஆனந்தனை, சென்னை நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைய உத்தரவிட்டிருந்தது.இதன்படி, சக்தி ஆனந்தன், சென்னை நிதிநிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும்சிறப்பு நீதிமன்ற நீதிபதி மலர் வாலன்டினா முன்பு கடந்த ஐந்தாம் தேதி சரணடைந்தார்.

இந்த வழக்கில் மீண்டும் ஜாமின் கோரி சக்தி ஆனந்தன் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. 69 லட்சம் மக்கள் இந்த செயலியால் பதிப்புக்கு உள்ளானதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

எனவே my V3 ads நிறுவன உரிமையாளர் சக்தி ஆனந்தனின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி டிவி தமிழ்ச்செல்வி உத்தரவிட்டார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!