அவசரகதியில் யானை வழித்தடம் என்ற புதிய பீதி.. வனத்தை ஆக்கிரமிக்க திமுக பிளான் : எல்.முருகன் கண்டனம்!

Author: Udayachandran RadhaKrishnan
19 May 2024, 12:53 pm
l-murugan---stalin-updatenews360
Quick Share

அவசரகதியில் யானை வழித்தடம் என்ற புதிய பீதி.. வனத்தை ஆக்கிரமிக்க திமுக பிளான் : எல்.முருகன் கண்டனம்!

யானைகள் மற்றும் மனிதர்கள் இடையிலான மோதல்களை தவிர்க்கவும், யானைகளை பாதுகாக்கவும், வனத்துறை சார்பில் தமிழகம் முழுதும், 42 யானை வழித்தடங்கள் அடையாளம் காணப்பட்டு, அதுதொடர்பாக, 161 பக்க அறிக்கையை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது.

யானை வழித்தடங்களில் தனியார் விடுதிகள், நெடுஞ்சாலைகள், தேயிலை தோட்டங்கள், விவசாய நிலங்கள் மட்டும் அல்லாது, மக்கள் வசிக்கும் பகுதிகளும் உள்ளன.

வனத்துறையின் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க: ஒரே நாளில் ஒரே கோவிலில் 21 திருமணங்கள்.. முகூர்த்த நாளை முன்னிட்டு களைகட்டிய கூட்டம்!

தமிழகத்தில், 20 யானை வழித்தடங்களை மத்திய அரசு கண்டறிந்துள்ள நிலையில், தமிழக அரசால் அமைக்கப்பட்ட குழு, 42 வழித்தடங்களை கண்டறிந்துள்ளதாக கூறுகிறது.

சுற்றுச்சூழல், வனப்பகுதி பாதுகாப்பு விஷயத்தில், மத்திய அரசின் எந்த ஒரு வழிகாட்டு நெறிமுறைகளையும், தி.மு.க., அரசு பின்பற்றுவதாக தெரியவில்லை.

அறிக்கையை ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளனர். சாதாரண மக்கள் இதை எப்படி படித்து புரிந்து கொள்வர். தேர்தல் நடத்தை விதி அமலில் இருக்கும் போது, அறிக்கையை வெளியிட வேண்டிய அவசியம் என்ன?

பல தலைமுறைகளாக வசிக்கும் மக்கள் ஒரு போதும், யானைகளின் வாழ்விடங்களையோ, வழித்தடங்களையோ ஆக்கிரமித்ததில்லை.

அவர்களை வெளியேற்றி விட்டு, தி.மு.க., குடும்ப உறுப்பினர்களுக்கு நெருக்கமான தொழிலதிபர்களுக்கு வழங்குவதற்காக தான், அவசரகதியில் யானை வழித்தடம் என்ற புதிய பீதியை தி.மு.க., அரசு செய்கிறதோ என்ற எண்ணம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

மக்களிடம் நேரடியாக சென்று கருத்து கேட்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Views: - 160

0

0