இது என்னடா கொடுமையா இருக்கு..? நீலகிரிக்கும் மஞ்சள் அலர்ட்டா..? 19 மாவட்டங்களில் சுட்டெரிக்கப் போகும் வெயில்…! !!

Author: Babu Lakshmanan
2 May 2024, 12:15 pm

தமிழகத்தில் நீலகிரி உள்பட 19 மாவட்டங்களுக்கு அதிக வெப்ப நிலைக்கான மஞ்சள் அலர்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. வெயிலின் உக்கிரம் அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் நாள்தோறும் 110 டிகிரியை தொடும் அளவுக்கு வெயில் கொளுத்துகிறது.

மேலும் படிக்க: ‘தன் பிஞ்சுக் குழந்தைகளின் முகத்தை கூட பார்க்காமல்’…. மருத்துவர் அஞ்சுதா மறைவு குறித்து விஜயபாஸ்கர் உருக்கம்..!!

இதன்காரணமாக, வெப்பம் அதிகம் நிலவும் மாவட்டங்களுக்கு மஞ்சள் மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்து வருகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப அலை வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சீபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூரில் 110 டிகிரி பாரன்ஹீட் வரை ஒட்டி வெயில் பதிவாகலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த 19 மாவட்டங்களுக்கு 2 நாட்கள் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்படுள்ளது.

  • actress kayadu lohar increased his salary double இதுதான் சரியான தருணம்-சமயம் பார்த்து உஷாராக சம்பளத்தை ஏற்றிய கயாது லோஹர்!