ஜாமீன் வேண்டாம்… பின்வாங்கிய மகா விஷ்ணு : நீதிமன்றம் போட்ட பரபரப்பு உத்தரவு!!

Author: Udayachandran RadhaKrishnan
11 செப்டம்பர் 2024, 6:53 மணி
Maha
Quick Share

சென்னை அசோக் நகர் மற்றும் சைதாப்பேட்டை பள்ளிகளில் மாணவ-மாணவிகள் மத்தியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மூடநம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மகாவிஷ்ணுவை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.

இந்நிலையில், மூடநம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணுவை, 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இதனையடுத்து, மகாவிஷ்ணுவை, சைதாப்பேட்டை போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.

  • CM Air அலற விட்ட மெரினா : மக்கள் நலனில் பூஜ்யம்… விளம்பரத்தால் ராஜ்ஜியம்!
  • Views: - 186

    0

    0