காலை வேட்பு மனு.. மாலையில் டெல்லி.. இதுல என்ன அண்ணாமலை தேர்தல் வியூகம்? ஆர்.பி உதயகுமார் சரமாரி விமர்சனம்!

Author: Udayachandran RadhaKrishnan
7 March 2024, 8:46 pm

காலை வேட்பு மனு.. மாலையில் டெல்லி.. இதுல என்ன அண்ணாமலை தேர்தல் வியூகம்? ஆர்.பி உதயகுமார் சரமாரி விமர்சனம்!

மதுரை வாடிப்பட்டியில் அதிமுக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி பொதுமக்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.இதில் கலந்து கொண்ட எதிர்கட்சிதுணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார்.

அவர் கூறியதாவது:- திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை காற்றில் பிறக்க விட்டு, விலைவாசியை உயர்த்திவிட்டு ஸ்டாலின் பொதுமக்களை பார்த்து நீங்கள் நலமா என்று கேட்டால் எப்படி நியாயமாக இருக்கும். என ஆசிரியர்கள் பெண்கள் மாணவர்கள் என எல்லோரும் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள்.

38 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட திமுக நிவாரணநிதியை பெறுவதற்கு தைரியம் இல்லை. பொதுமக்களுக்கான நிதியை தருவதற்கு மத்திய அரசுக்கும் மனமில்லை. விவசாயிகளையும் தமிழக மக்களையும் வஞ்சித்து ஏமாற்றுகிற கண்துடைப்பு வேலையைதான் திமுக அரசும், மத்திய அரசும் செய்கிறது. அதிமுக தொண்டர்களின் குறி அர்ஜுனன் குறி. நாடாளுமன்ற தேர்தலில் இரட்டை இலையை வெற்றி பெறச் செய்வது தான் எங்களின் இலக்கு.

எடப்பாடி யார் யாரை வேட்பாளராக நிறுத்துகிறாரோ. அவர்களுக்குக்குத்தான் இரட்டை இலை சின்னம். அவர்கள்தான் வெற்றி பெறுவார்கள்.

பிஜேபியில் உள்ள டெல்லி எஜமானர்கள் யாரை தேர்வு செய்து அறிவிக்கிறார்களோ அவர்களைதான் அண்ணாமலை அறிவிக்க முடியும். தனிப்பட்ட முறையில் இவர் அறிவிக்க முடியாது.

காலையில் வேட்பு மனு வாங்கி மாலையில் பரிந்துரைக்காக டெல்லி கொண்டு சென்றார்கள். இதில் அண்ணாமலை தேர்தல் வியூகம் என ஏதுமில்லை. மக்களை ஈர்க்கக்கூடிய விளம்பர வெளிச்சத்தில் தான் மத்திய அரசும், மாநில அரசும் உள்ளது. என எதிர்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!