தமிழக கோவில்களில் ராமருக்கு சிறப்பு பூஜை செய்ய அனுமதி இல்லை..? மறுத்த சேகர்பாபு… ஆடியோவை வெளியிட்டு அம்பலப்படுத்திய அண்ணாமலை!!

Author: Babu Lakshmanan
22 January 2024, 9:00 am

தமிழக கோவில்களில் ராமருக்கு சிறப்பு பூஜை செய்ய அனுமதி இல்லை என்று இந்து அறநிலையத்துறை அதிகாரி கூறும் ஆடியோவை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.

ராமர் கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெறுகிறது. இதையொட்டி, நாடு முழுவதும் உள்ள கோவில்களில் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்களால் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், தமிழக கோவில்களில் பாஜகவினரால் சிறப்பு பூஜைகள் செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், ராமர் கோவிலுக்கான சிறப்பு பூஜைகளை செய்ய அனுமதிக்கக் கூடாது என்று இந்து அறநிலையத்துறை சார்பில் வாய்மொழி உத்தரவிடப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்தனர். ஆனால், இதுபோன்று எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்று இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு விளக்கம் அளித்திருந்தார்.

இந்த நிலையில், ராமர் கோவிலுக்கான சிறப்பு பூஜைகளை செய்ய அனுமதிக்கக் கூடாது என்று உத்தரவிடப்பட்டிருப்பதாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் பேசும் ஆடியோவை அண்ணாமலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக பெண் நிர்வாகி ஒருவர் இந்து சமயநிலையத்துறை அதிகாரியை தொடர்பு கொண்டு, ராமர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி சிறப்பு பூஜைகள் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறார். ஆனால், பூஜைகளுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று வாய்மொழியாக உத்தரவு வந்துள்ளதாகவும், மீறி அனுமதித்தால் தனக்கு பிரச்சனை ஏற்படும் என்று அந்த அதிகாரி கூறுவது அந்த ஆடியோவில் பதிவாகியுள்ளது. இது தமிழகத்தில் உள்ள இந்து மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • santhosh narayanan shared the comic incident viral on internet சந்தோஷ் நாராயணனை அவமானப்படுத்திய நபர்! விழுந்து விழுந்து சிரித்த சூர்யா? இப்படியா பண்றது?