ஆசிரியர்களை தொடர்ந்து திமுகவுக்கு எதிராக குவிந்த செவிலியர்கள்… வாக்குறுதியை நிறைவேற்ற கோரிக்கை : குண்டுக்கட்டாக கைது!

Author: Udayachandran RadhaKrishnan
10 October 2023, 10:09 am
Nurse -Updatenws360
Quick Share

திமுகவின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி எம்ஆர்பி செவிலியர்கள் போராட்டம் நடத்திய நிலையில், அவர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

பணி நிரந்தரம் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி எம்ஆர்பி தொகுப்பூதிய செவிலியர்கள் இன்று காலை டிஎம்எஸ் வளாகத்தில் திரண்டனர்.

திமுக தேர்தல் வாக்குறுதி 356ல் தொகுப்பு ஊதிய செவிலியர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்வோம் என்று கூறி இருந்தது. ஆனால் இதுவரை அதை நிறைவேற்றவில்லை. போராடி பெற்ற மகப்பேறு விடுப்பு தற்போதைய திமுக ஆட்சியில் மறுக்கப்பட்டதுடன் மகப்பேறு விடுப்புக்கான ஊதியம் பெற்றவர்களிடமிருந்து அந்த ஊதியத்தையும் திரும்ப பெற உத்தரவிடப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தால் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க உத்தரவிட்டும் அந்த உத்தரவை நீர்ந்து போகும் விதமாக பொய்யான அறிக்கை தயாரிக்கப்பட்டு நீதிமன்றத்தில் சமர்பித்துள்ளது.

கடந்த ஆட்சியில் எல்லா பேராட்டங்களிலும் பங்கு பெற்று நமது போராட்டங்களுக்கு ஆதரவு தந்த திமுக நிர்வாகிகள், அமைச்சர்கள் தற்போது மனவுமான உள்ளனர்.

அன்று போராட்டம் நியாயமானது என்று அறிக்கை விடுத்த அப்போதைய எதிர்க்கட்சி தலைவர், தற்போது முதலமைச்சரானதும் அமைதி காத்து வருகிறார்.

இதனை தொடர்ந்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தப்பட்ட போராட்டத்தில் ஈடுபட்ட எம்ஆர்பி செவிலியர்களை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர்.

Views: - 369

0

0