ஒரே நாடு ஒரே தேர்தல்… ஒப்புதல் அளித்த மத்திய அமைச்சரவை : விரைவில் அமல்..!!

Author: Udayachandran RadhaKrishnan
18 September 2024, 4:47 pm

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை பாஜக அரசு கொண்டு வரும் என்ற பேச்சு கடந்த ஆட்சியில் இருந்தே பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்த ஆட்சிக் காலத்துக்குள் அமல்படுத்த பாஜக தீவிரம் காட்டி வருகிறது.

சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் அதை உறுதிப்படுத்தும் வகையில் பேசி இருந்தார். இதுதொடர்பாக ஏற்கனவே முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு அமைக்கப்பட்டிருந்தது.

இந்த குழு நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரின் கருத்துக்களைப் பதிவு செய்து ஆராய்ந்து ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த ஆய்வை இறுதி செய்து அந்த அறிக்கையை மத்திய அமைச்சரவையில் சமர்ப்பித்தது.

மேலும் படிக்க: திமுகவினரை அருகில் அமர வைத்து என்ன பேசப் போகிறேன் என்பதை பொறுத்திருந்து பாருங்கள்.. திருமா டுவிஸ்ட்!

இந்நிலையில் இன்று பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடர்ந்து எதிர்வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இது மசோதாவாக தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மோடி தலைமையிலான மூன்றாவது ஆட்சி காலத்தின் 100 நாள் நிறைவு கொண்டாட்டங்களை ஒட்டி ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?