விமானத்தில் எம்ர்ஜென்சி கதவை திறந்து விளையாட்டு.. அமைச்சர் செந்தில் பாலாஜி ட்விட்டால் பரபர!

Author: Udayachandran RadhaKrishnan
29 December 2022, 7:57 pm

தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சரான செந்தில் பாலாஜி ட்விட்டரில் தொடர்ந்து ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார். அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சியினர் மீது ட்விட்டரில் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.

இந்த நிலையில் இன்று ட்விட்டரில் பதிவிட்டு உள்ள செந்தில் பாலாஜி, “கடந்த 10 ஆம் தேதி ‘போட்டோஷாப்’ கட்சியின் மாநிலத் தலைவரும், இளைஞரணியின் தேசியத் தலைவரும் விமானத்தில் கிளம்பும் போது பொறுப்பே இல்லாமல் விமானத்தின் ‘எமர்ஜென்சி’ கதவை திறந்து விளையாடி இருக்கிறார்கள்.

விதிமுறைகளின்படி பயணிகள் விமானத்தில் இருந்து இறக்கி மீண்டும் சோதனை செய்யப்பட்டு நோகடிக்கப்பட்டிருக்கிறார்கள். விமானம் 3 மணி நேர தாமதம் ஆகியிருக்கிறது.

மன்னிப்பு கடிதம் எழுதுவதே பரம்பரை வழக்கம் என்பதால், அன்றும் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்திருக்கிறார்கள். ஊடகங்களில் இந்தச் செய்தி ஏன் வரவில்லை?” என்று குறிப்பிட்டு உள்ளார்.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?