கரூர் தொகுதியை காங்., கட்சிக்கு ஒதுக்க எதிர்ப்பு : ஜோதிமணிக்கு கல்தா..அமைச்சர் மனைவிக்கு ஜாக்பாட்?!!

Author: Udayachandran RadhaKrishnan
7 February 2024, 8:53 pm

கரூர் தொகுதியை காங்கிரஸ்க்கு ஒதுக்க எதிர்ப்பு : ஜோதிமணிக்கு கல்தா..அமைச்சர் மனைவிக்கு ஜாக்பாட்?!!

நாடாளுமன்ற தேர்தல் நெருங்க, நெருங்க அரசியல் களத்தில் சூடு ஏறிவருகிறது. அந்த அளவிற்கு ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்கும், தொகுதி சரியாக கிடைக்காத காரணத்தால் எதிர்கட்சிக்கும் கூட்டணி கட்சிகள் அல்லது எம்எல்ஏ, எம்பிக்கள் ஜம்ப் அடிப்படி போன்ற நிகழ்வுகள் நாளுக்கு நாள் தொடர்ந்து வருகிறது.

ஒரு பக்கம் திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்தையை தொடங்கியுள்ளது. இதில் காங்கிரஸ் கட்சியுடன் நடந்த பேச்சுவார்த்தையில், காங்கிரஸ் கட்சி 12 இடங்களை கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் திமுகவை பொறுத்தவரை 7 முதல் 8 இடங்கள் மட்டுமே வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து திமுக ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஒவ்வொரு தொகுதி நிர்வாகிகளையும் திமுக தலைமை அழைத்து தொகுதி நிலவரத்தை கேட்டறிந்தது.

அப்போது கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணிக்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கடந்த 5 வருடமாக மக்களுக்கு எந்தவித திட்டமும் செயல்படுத்தவில்லையென்றும், தொகுதி பக்கமே வரவில்லையென புகார் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஜோதிமணிக்கு இந்த முறை கரூர் தொகுதி ஒதுக்க கூடாது என வலியுறுத்தி இருந்தனர். எனவே திமுகவே இந்த முறை கரூர் தொகுதியில் களத்தில இறங்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். இதற்கு திமுக தலைமை நல்ல பதில் விரைவில் சொல்கிறோம் என தெரிவித்துள்ளது. மேலும் யாரை வேட்பாளாராக நிறுத்தினாலும் வெற்றிக்கு பாடு பட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.

இதனிடையே கரூர் தொகுதியில் நாடாளுமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று 20 வருடங்கள் ஆகியுள்ள நிலையில் இந்த முறை திமுகவே போட்டியிட வேண்டும் என்பது தொண்டர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

எனவே கரூர் தொகுதியில் அனைவருக்கும் தெரிந்த நபர் செந்தில் பாலாஜி, தற்போது அமலாக்கத்துறை பிடியில் சிக்கியுள்ளதால் வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கரூர் தொகுதியில் செந்தில் பாலாஜியின் மனைவியை வேட்பாளராக நிறுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் செந்தில் பாலாஜி தரப்பு இந்த தகவலை மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் எது உண்மை என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?