மருத்துவமனைக்கு செல்ல ஆற்றில் லாரி டியூப் பயன்படுத்தும் நோயாளி : பாலம் இல்லாததால் அவலம்!!

Author: Udayachandran RadhaKrishnan
4 August 2024, 11:24 am

ஆந்திரா மாநிலம் அல்லூரி சீதாராம ராஜூ மாவட்டம் பனுகுறித்திபாளம் கிராமத்தை சேர்ந்த கெபண்ணுக்கு நேற்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

அந்தப் பகுதியில் உள்ள பாலம் இல்லாத ஓடையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் காரணத்தால் அந்த ஓடையை கடந்து நோயாளி ஒருவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டபோது அவரை காற்று நிரப்பிய லாரி ட்யூபில் படுக்க வைத்து இளைஞர் ஒருவர் ஆர்ப்பரித்து ஓடும் தண்ணீரில் இழுத்துச் சென்று அவரை மறுகரைக்கு சேர்த்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.

தங்களுடைய இந்த அவல நிலை பற்றி கூறும் அந்த பகுதி பொதுமக்கள் நாடு சுதந்திரம் பெற்று 77 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் பலர் வந்து போய் விட்டனர்.

ஆனால் எங்களுடைய இந்த நிலை பழங்கால முதல் இப்படியே நீடித்து வருகிறது என்று கவலை தெரிவிக்கின்றனர்.

  • actress kayadu lohar increased his salary double இதுதான் சரியான தருணம்-சமயம் பார்த்து உஷாராக சம்பளத்தை ஏற்றிய கயாது லோஹர்!