பெரியார் சிலை குறித்து சர்ச்சை பேச்சு… ஜாமீன் கோரி கனல் கண்ணன் மனு; எதிர்க்கும் த.பெ.தி.க..!!

Author: Babu Lakshmanan
17 August 2022, 5:10 pm

பெரியார் சிலை குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்ததாக கைது செய்யப்பட்ட கனல் கண்ணன், ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

சென்னை மதுரவாயலில் நடந்த கூட்டத்தில் பேசிய இந்து முன்னணி நிர்வாகி கனல் கண்ணன், கடவுளே இல்லை என சொன்ன பெரியாருக்கு ஸ்ரீரங்கம் கோயில் முன்பு சிலை எதற்கு, அதை அகற்ற வேண்டும் என பேசியிருந்தார்.

சென்னை மதுரவாயலில் நடந்த கூட்டத்தில் பேசிய இந்து முன்னணி நிர்வாகி கனல் கண்ணன், கடவுளே இல்லை என சொன்ன பெரியாருக்கு ஸ்ரீரங்கம் கோயில் முன்பு சிலை எதற்கு, அதை அகற்ற வேண்டும் என பேசியிருந்தார்.

இவரது பேச்சுக்கு எதிராக அரசியல் கட்சியினர் கடும் கண்டங்களை பதிவு செய்திருந்தனர். அவரை கைது செய்ய வேண்டும் என பல தரப்பினரும் வலியுறுத்தினர். இந்த நிலையில் அவர் தலைமறைவானார்.

இதையடுத்து அவர் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. தொடர்ந்து சைபர் க்ரைம் போலீசார் அவரை தேடி வந்த நிலையில், இன்று புதுச்சேரியில் பதுங்கியிருந்தவரை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், ஜாமீன் கோரி கனல் கண்ணன் எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு நீதிபதி கிரிஜா ராணி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கனல் கண்ணனுக்கு ஜாமீன் வழங்க ஆட்சேபனை தெரிவித்து, புகார்தாரர் (த.பெ.தி.க.) மாவட்ட செயலாளர் குமரன் இடையீட்டு மனுத்தாக்கல் செய்தார்.

இதையடுத்து, இரு மனுக்களையும் நாளை விசாரிப்பதாக நீதிபதி கிரிஜா ராணி தெரிவித்தார். அதன்படி மனு நாளை விசாரணைக்கு வருகிறது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!