திமுகவின் இலவச பேருந்து திட்டம் குறித்து பிரதமர் மோடி விமர்சனம்.. பதிலடி கொடுத்த அமைச்சர் பிடிஆர்!

Author: Udayachandran RadhaKrishnan
17 May 2024, 2:35 pm

திமுகவின் இலவச பேருந்து திட்டம் குறித்து பிரதமர் மோடி விமர்சனம்.. பதிலடி கொடுத்த அமைச்சர் பிடிஆர்!

பிரபல ஆங்கில ஊடகத்துக்கு பேட்டியளித்த பிரதமர் மோடி, சில அரசியல் கட்சிகள் பெண்களுக்கு இலவச பேருந்து பயண திட்டத்தை வழங்குகின்றன.

இதனால் மெட்ரோல் ரயில்களில் பயணிகளின் எண்ணிக்கை சரிந்து வருகிறது. அதோட இலவச பேருந்து பயண திட்டத்தால் போக்குவரத்து அதிகரித்து, சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது என தெரிவித்திருந்தார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி நெட்டிசன்களும் கருத்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் தமிழக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பதிலடி கொடுத்துள்ளார்.

மேலும் படிக்க: கோவை மத்திய சிறையில் பெலிக்ஸ் ஜெரால்டை அடைக்க உத்தரவு : மே 31 வரை காவல் நீட்டிப்பு!

இது தொடர்பாக அவர் தனது X தளப்பக்கத்தில், ‛இது ஒரு கேலிக்கூத்து. கேலிக்கூத்தர்கள் ஒவ்வொருவரும் யார் முதலிடத்துக்கு வருகிறோம் என்பதற்காக போட்டியிடுகின்றனர்.

மேலும் இந்த காட்சி என்பது பிரதமர் ஏன் கடந்த 10 ஆண்டுகளாக பத்திரிகையாளர்களை சந்திக்கவில்லை என்பதை விளக்குகிறது.

மேலும் அங்குள்ள Court Jesters, ஒரு பத்திரிகையாளராக செயல்பட்டு இருந்திருந்தால் தர்க்க ரீதியாக உடனே சில கேள்விகளை எழுப்பி இருக்க வேண்டும்.

அதில் முதலாவது கேள்வி இப்படி ஏதாவது ஒரு இடம் உள்ளதா? A.ஒரு இடத்தில் மெட்ரோ சேவை மட்டுமே இருந்து பஸ் சேவைகள் இல்லாமல் இருக்கிறதா? B.பொதுப்போக்குவரத்தை பொறுத்தமட்டில் மாணவர்கள், வயதானவர்கள், மாதந்திர பஸ் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படவில்லையா? C. பஸ் சேவையானது மெட்ரோ ரயிலின் சேவையை பாதிக்கிறதா? என கேட்டிருக்க வேண்டும்.

  1. சென்னை மெட்ரோ 2ம்கட்ட பணிக்கு (புதிய வழித்தடம்) இன்னும் ஏன் நிதி வழங்க ஒப்புதல் வழங்காமல் மத்திய அமைச்சரவையில் பல ஆண்டுகளாக கிடப்பில் வைக்கப்பட்டுள்ளது?.

அதேவேளையில் சென்னை மெட்ரோவுக்கு பிறகு வந்த பிற நகரங்களுக்கான மெட்ரோ திட்ட அறிவிப்புகள்/ஒப்புதல்களுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது. இது சென்னை மெட்ரோ பணியை மெதுவாக்கும் செயலா? அதேவேளையில் மெட்ரோவில் ஒருவர் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லமுடியாது? என்பதை சுட்டிக்காட்டி இருக்கலாம் என விமர்சனம் செய்த பதிலடி கொடுத்துள்ளார்.

  • enforcement department charges against the actors who acting in online rummy app நான் சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடிக்கவில்லை- அமலாக்கத்துறை வழக்கில் பிரகாஷ் ராஜ் புது விளக்கம்?