சமூக நீதி பற்றி பேச திமுகவுக்கு தகுதியே இல்லை… யாரும் எதிர்க்காத நிலையில் CM ஸ்டாலினுக்கு தயக்கம் ஏன்..? அன்புமணி ராமதாஸ் ஆவேசம்!!

Author: Babu Lakshmanan
3 February 2024, 12:39 pm

தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாத திமுகவிற்கு சமூக நீதி குறித்து பேச தகுதியில்லை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ் நாடாளுமன்றத் தேர்தலுக்கு பாமக தயாராக உள்ளதாகவும், விரைவில் கூட்டணி குறித்து அறிவிப்போம் எனவும் தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் குருவை சம்பா பாதிப்பு காரணமாக அரிசி விலை இன்னும் ஏற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது என்றும், இதனை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாத திமுகவிற்கு சமூகநீதி குறித்து பேச தகுதியில்லை எனவும், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த எந்த சமூகத்தினரும் எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில் முதல்வருக்குதான் மனசு இல்லை என குற்றம் சாட்டினார்.

நடிகர் விஜயின் அரசியல் பிரவேசம் குறித்த கேள்விக்கு பதிலளித்து பேசிய அன்புமணி, டாக்டராக இருந்தாலும் சரி, ஆக்டராக இருந்தாலும் சரி யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம், ஆனால் பாமக போல சாதனைகளை செய்ய வேண்டும் என்றார்.

மேலும் தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே இருக்கும் ஈகோ பிரச்சினையால் பொதுமக்களுக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் தான் பாதிப்பு என்ற அவர், பெரியார் பல்கலைக்கழக முறைகேடு குறித்து அரசு கள ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை திட்டமிட்டு திறந்திருக்க வேண்டும் என்ற அன்புமணி ராமதாஸ், கோயம்பேடு பேருந்து நிலையத்தை அவசரம் அவசரமாக அப்புறப்படுத்த பார்க்கிறார்கள். இங்கு பசுமை பூங்காவை தவிர வேறு என்ன கொண்டு வந்தாலும் நானே முதல் ஆளாக இறங்கி கடுமையாக போராடுவேன், என எச்சரித்தார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!