காவல்துறை யாருக்கும் அடிமையாக இல்லாமல் கடமையை செய்ய வேண்டும் : தமிழக பாஜக பிரமுகர் தாக்கு!

Author: Udayachandran RadhaKrishnan
10 July 2024, 4:28 pm

பாஜக மாநில துணைத் தலைவர் கரு நாகராஜன் சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்…

அப்போது பேசிய அவர், நாடாளுன்றத்தில் ராகுல்காந்தி அக்னிபாத் தொடர்பாக பெரிய பொய்யை பேசினார். அதற்கு ராஜ்நாத் சிங் பதிலடியும் கொடுத்துள்ளார்.

ராகுல்காந்தி மட்டும் அல்ல நமது முதலமைச்சர், உதயநிதி என அனைவருக்கும் இந்த திட்டத்தை குறை சொல்வதுதான் எண்ணம். பல மாநிலங்களில் அக்னிபாத் திட்டத்தில் 4 வருடம் கழித்து வரும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு முன்னுரிமை வழங்கப்படும் என கூறியுள்ளனர்.

இளைஞர்கள் நிறைந்த ராணுவத்தை உருவாக்க வேண்டும் என்று உருவாக்கப்பட்ட இந்த திட்டத்தை அரசியலுக்காக அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

காவல்துறையில் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளது தொடர்பான கேள்விக்கு… தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை மிக மோசமாக உள்ளது. காவல்துறை தனது கடமையைச் செய்ய வேண்டும். யாருக்கும் அடிமையாக இருக்காக்கூடாது.

பாஜகவின் முன்னாள் ராணுவ பிரிவின் தலைவர் ராமன் செய்தியாளரிடம் பேசுகையில்…

நாடாளுமன்றத்தில் அக்னிபாத் ராணுவ வீரருக்கு இழப்பீடு தொகை வழங்கியது தொடர்பாக ராகுல்காந்தின் கேள்விக்கு ராஜ்நாத் சிங் பதிலளித்தார். அது பொய் என்று ராகுல்காந்தி சொன்னார்.

ராணுவ வீரருக்கு கருணை நிதி, இன்சூரஸ் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. பாக்கி உள்ள பணம் சிறிது தாமதம் ஏற்பட்டதை அவர் தவறாக புரிந்துகொண்டுள்ளார். அக்னிபாத் திட்டம் ஒரு சிறந்த திட்டம்..

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!