நிதியமைச்சர் நாமம் போட்டு விட்டார்;திமுக போஸ்டரால் பொள்ளாச்சியில் பரபரப்பு
Author: Sudha27 ஜூலை 2024, 4:20 மணி
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகத்திற்கு நாமம் போட்டு விட்டார் என கோவை பொள்ளாச்சி நகர தெருக்களில் ஒட்டப்பட்ட திமுக போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த 23 ம் தேதி நாடாளுமன்றத்தில் மத்திய அரசின் நிதி அமைச்சரால் தாக்கல் செய்யப்பட்ட 2024-2025 ஆண்டுக்கான மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையில் மாநிலத்திற்கு மாநிலம் பாராபட்சம் உள்ளதாகவும், தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்கும் வகையில் நிதிநிலை அறிக்கை உள்ளதால் தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப், கர்நாடக உள்ளிட்ட மாநிலங்கள் பிரதமரின் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்துள்ளனர்
இந்நிலையில் நிதிநிலை அறிக்கையில் தமிழ் நாட்டிற்கு நிதி ஒதுக்கீடு ஓன்றும் இல்லை என்பதை குறிப்பிடும் வகையில் பொள்ளாச்சி நகர திமுக என குறிப்பிட்டு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கையில் பட்டை நாமம் உள்ளது போன்ற போஸ்டர்கள் பொள்ளாச்சி பேருந்து நிலையம் தேர்நிலை என பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டுள்ளது.இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
0
0