அலர்ட்டான மதுரை மாநகரம்… நாளை குடியரசு தலைவர் வருகை ; 5 அடுக்கு பாதுகாப்புடன் நடந்த பாதுகாப்பு ஒத்திகை..!!

Author: Babu Lakshmanan
17 February 2023, 4:21 pm

குடியரசுத்தலைவர் வருகையையொட்டி, மதுரை விமான நிலையம் முதல் மீனாட்சியம்மன் கோவில் வரை பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.

வரும் 18 மற்றும் 19ஆம் தேதி ஆகிய இரு நாட்கள் குடியரசுதலைவர் திரௌபதி முர்மு தமிழகத்திற்கு இரு நாட்கள் பயணம் மேற்கொள்கிறார். நாளை காலை 12 மணிக்கு மேல் டெல்லியில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு விமானம் மூலமாக வருகை தரும் குடியரசு தலைவர், விமானநிலையத்தில் இருந்து காரில் மீனாட்சியம்மன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்கிறார்.

குடியரசு தலைவர் வருகையை முன்னிட்டு விமான நிலையம் மற்றும் மீனாட்சியம்மன் கோவிலை சுற்றி 5 அடுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோவிலை சுற்றி 8 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

மீனாட்சியம்மன் கோவில், விமான நிலையம் மற்றும் வில்லாபுரம் மேம்பாலம், விமான நிலையம் முதல் மீனாட்சியம்மன் கோவில் வரையிலான சாலைகளிலும் குடியரசு தலைவருக்கான பாதுகாப்பு குழுவினர் ஆய்வு நடத்தினர். குடியரசு தலைவர் வருகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் உள்ள தங்கு விடுதிகளிலும், ரயில் நிலையங்களில், விமான நிலையங்களில் பயணிகளிடம் பாதுகாப்பு சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், குடியரசுத் தலைவரின் வருகை முன்னிட்டு மதுரை விமான நிலையம் முதல் மீனாட்சி அம்மன் கோவில் வரையிலும் மீண்டும் மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து மதுரை விமான நிலையம் வரைக்கும் பாதுகாப்பு வாகன ஒத்திகை நடைபெற்றது. இந்த ஒத்திகையின் பொழுது குடியரசுத் தலைவர் வரும் வாகனம் போன்றும், அதே போன்று பாதுகாப்பு வாகன அணி வகுப்பு போன்று நடத்தப்பட்டு குடியரசுத் தலைவரின் நாளைய நிகழ்ச்சி குறித்தான ஒத்திகை நடத்தப்பட்டது.

தொடர்ச்சியாக பாதுகாப்பு ஏற்பாட்டு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அனீஸ்சேகர் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளும் ஆய்வு மேற்கொண்டனர். மதுரை மாவட்டம் முழுவதிலும் குடியரசு தலைவரின் வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!