ஜெய்ஸ்ரீராம் கோஷத்துக்கு எதிரா அந்த நாட்டு ஜெர்சியை போட்டு பாக்., ஜிந்தாபாத்னு கூவுறாங்க : ஆபத்துல முடியும்… அண்ணமலை வார்னிங்!!

Author: Udayachandran RadhaKrishnan
30 October 2023, 4:34 pm

ஜெய்ஸ்ரீராம் கோஷத்துக்கு எதிரா அந்த நாட்டு ஜெர்சியை போட்டு பாக்., ஜிந்தாபாத்னு கூவுறாங்க : ஆபத்துல முடியும்… அண்ணமலை வார்னிங்!!

நாமக்கல் மாவட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.

இதையடுத்து அவர் சேந்தமங்கலத்தில் நடைப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது அவர் பேசுகையில், அடித்தட்டு மக்களுக்கான ஆட்சி தற்போது தமிழகத்தில் நடக்கவில்லை. ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக ஆட்சி நடக்கிறது. அதுதான் ஜனநாயகம் என நினைக்கிறார்கள்.

பழங்குடியின மக்களுக்கு திமுக தலைமையிலான அரசு எதிராக உள்ளது. மத்திய அமைச்சரவையில் 11 பேர் பழங்குடியினத்தை சேர்ந்த அமைச்சர்கள் உள்ளனர். ஆனால் தமிழகத்தில் உள்ள 35 அமைச்சர்களில் ஒருவர் கூட பழங்குடியினத்தை சேர்ந்தவர் இல்லை.
திமுக தேர்தல் அறிக்கையில் 3.50 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்குவோம் என தெரிவித்திருந்தது. ஆனால் கடந்த இரண்டரை ஆண்டுகளில் 12 ஆயிரம் பேருக்கு மட்டுமே தமிழக அரசு வேலை வாய்ப்பு வழங்கியது.

படித்த இளைஞர்களுக்கு எதிரான அரசாக திமுக தலைமையிலான அரசு உள்ளது. உதயநிதி ஸ்டாலினுக்கு மட்டுமே தமிழக முதல்வர் ஸ்டாலின் வேலை வாய்ப்பை வழங்கியுள்ளார்.

தமிழக முதல்வரை பொறுத்தவரை குடும்ப மட்டுமே நன்றாக இருக்கக் கூடியதாக இருக்க வேண்டும் என நினைக்கிறார். பாஜக ஆட்சி என்பது அடித்தட்டு மக்களுக்கான ஆட்சி.

திமுக ஆட்சி மகன், மருமகனுக்கான ஆட்சி. ஊழல் குறித்து திமுக பேசக் கூடாது. திமுக அமைச்சர்களில் 11 பேர் மீது நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் இடையே நடந்த கிரிக்கெட் போட்டியின் போது திமுகவினர் பாகிஸ்தான் டீசர்ட் போட்டுக் கொண்டு பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷமிட்டனர்.

திமுகவுக்கு வாக்கு வங்கி வேண்டும் என்பதற்காகவே தீவிரவாதத்தை ஊக்குவிக்கிறது. இதுவரை நடக்காத வகையில் ராஜ்பவன் மீது பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். தமிழகம் வன்முறைக் களமாக மாறியுள்ளது. இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

கடந்த 25 ஆம் தேதி மாலை சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் கருக்கா வினோத் என்பவர் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!