மாணவர்களை கொடூரமாக தாக்கி ராகிங்… சீனியர் மாணவர்களின் வெறிச்செயல் : ஷாக் வீடியோ!

Author: Udayachandran RadhaKrishnan
25 July 2024, 2:12 pm

ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டத்தில் உள்ள நரசராவ் பேட்டையில் எஸ்எஸ்என் என்ற பெயரில் கல்லூரி ஒன்று உள்ளது

அந்தக் கல்லூரியில் சீனியர் மாணவர்கள், ஜூனியர் மாணவர்களை என்சிசி ட்ரைனிங் என்ற பெயரில் அடித்து கொடுமைப்படுத்தி ராகிங் செய்தனர்.

கல்லூரியில் நடைபெற்ற கொடூரமான ராக்கிங் தொடர்பான காட்சிகளை ஒரு மாணவர் செல்போனில் வீடியோ பதிவு செய்து பகிர்ந்திருக்கிறார்.

பழங்காலத்தில் தவறு செய்தவர்களுக்கு தண்டனை வழங்கியது போல் ஜூனியர் மாணவர்களை சீனியர் மாணவர்கள் கல்லூரியில் கொடூரமாக ரேக்கிங் செய்தது இதன் மூலம் வெளி உலகுக்கு தெரிய வந்துள்ளது.

மாணவர்களை கொடூரமாக அடித்து ராக்கிங் செய்த சீனியர் மாணவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை இதனால் பல்வேறு தரப்பில் இருந்தும் ஏற்பட்டுள்ளது .

  • producers not accept to produce ajith kumar 64th movie அஜித்குமாரின் கண்டிஷனை கேட்டு தெறித்து ஓடும் தயாரிப்பாளர்கள்? அப்படி என்னதான் சொல்றாரு!