இராமலிங்கம் கொலை வழக்கு; களம் இறங்கிய NIA; தமிழகத்தின் 10 க்கும் மேற்பட்ட இடங்கள் டார்கெட்; சிக்கப் போகும் ஆதாரம் என்ன..!!

Author: Sudha
1 August 2024, 8:06 am

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள, திருபுவனத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் பாத்திரக் கடை நடத்தி வந்தார். கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5-ம் தேதி ராமலிங்கம் கொலைசெய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக 13 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர், இந்த வழக்கு என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது.

என்ஐஏ அதிகாரிகள் இந்த
கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.இவ்வழக்கில் தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனத்தைச் சேர்ந்த முகமது அலி ஜின்னா, கும்பகோணம் மேலக்காவேரியைச் சேர்ந்த அப்துல் மஜீத், வடக்குமாங்குடியைச் சேர்ந்த புர்ஹானுதீன், திருவிடைமருதூரைச் சேர்ந்த ஷாஹூல் ஹமீத், திருமங்கலக்குடியைச் சேர்ந்த நஃபீல் ஹாசன் ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. தலைமறைவாக இருந்த 5 பேரையும் என்ஐஏ அதிகாரிகள் தேடி வந்தனர்.தலைமறைவாக இருந்து வரும் 5 நபர்களை தேடப்படும் குற்றவாளியாக என்.ஐ.ஏ அறிவித்தது

இன்று தமிழகத்தில் தஞ்சை, திருச்சி, கும்பகோணம், மயிலாடுதுறை உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • rashmika mandanna first horror movie thama is vampire movie இரத்தக்காட்டேரியாக மாறும் கியூட் நடிகை? ராஷ்மிகா மந்தனாவின் புதிய ஹாரர் படத்தின் கதை இதுதானா?