தில் இருக்கா சீமான்… பாஜக சொல்வதை செய்வதா? சவாலுக்கு தயாரா? நான் மொட்டை அடிக்கிறேன் : வீரலட்சுமி எச்சரிக்கை!

Author: Udayachandran RadhaKrishnan
6 October 2023, 7:53 pm

தில் இருக்கா சீமான்… பாஜக சொல்வதை செய்வதா? சவாலுக்கு தயாரா? நான் மொட்டை அடிக்கிறேன் : வீரலட்சுமி எச்சரிக்கை!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் தமிழர் முன்னேற்ற படையின் வீரலட்சுமிக்கும் இடையே நடிகை விஜயலட்சுமி விவகாரத்தால் மோதல் முற்றியது.

சீமானை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வீரலட்சுமி சமீப காலமாக பேட்டி அளித்து வருகிறார். இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள உள்துறை செயலாளர் அலுவலகத்தில் வீரலட்சுமி, சீமான் மீது புகார் அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வீரலட்சுமி கூறியதாவது:- சீமான் நல்லவர் போல வேடம் போடுகிறார். இலங்கையை சேர்ந்த தமிழர்களை இந்திய குடியுரிமை வாங்கி கொடுப்பதாக கூறி பணம் பறித்து இருக்கிறார். இது தொடர்பாக ஆதாராத்துடன் உள்துறை செயலாளரிடம் மனு அளித்து இருக்கிறேன்.

சீமானுக்கு நான் ஒரு சவால் விடுக்கிறேன். ஒருவாரத்திற்குள் நீதிமன்றத்தால் சொத்துக்குவிப்பு வழக்கில் ஏ1 அக்யூஸ்டாக ஜெயலலிதாவும் ஏ2 வாக சசிகலாகவுக்கும் தண்டனை கொடுத்தார்கள் அல்லவா.. அந்த தீர்ப்பு நகலை அவர்களுடைய (நாம் தமிழர்) கட்சி இணையதளம் வாயிலாகவும் அப்படி இல்லன்னா… தமிழ்நாடு முழுவதும் தனது கையால் கொடுக்க வேண்டும்… பாஜக சொல்வதை சீமான் செய்கிறார். அதிமுகவுக்கு பி டீமாக செயல்படுகிறார். அப்படி செயல்படவில்லை. நான் மூன்றாவது கட்சி… நான் தான் 2 கட்சிக்கும் மாற்று கட்சி என்று சொல்லும் சீமான்.. இந்தக் குற்றச்சாட்டை நாட்டு மக்களுக்கு கொடுக்க தில் இருக்கா…

அப்படி அவர் ஒரு வாரத்தில் நாட்டு மக்களுக்கு கொடுத்தால் இதே தலைமை செயலக வாசலில் இருந்து நான் மொட்டை அடித்துக்கொள்கிறேன்.. சீமான் புக் ஆக அடித்து கொடுக்கவில்லை என்றால் மீசையை எடுத்துக்கொள்ள தயாரா என்று பேசினார்.

சீமானை தொடர்ந்து விமர்சித்து வரும் வீரலட்சுமி இன்று உள்துறை செயலாளரிடம் அவருக்கு எதிராக புகார் அளித்துள்ளார். அதோடு, சீமான் புலித்தோல் போர்த்திய குள்ள நரி என்றும்.. நாட்டு மக்கள் அவரை இந்த மண்ணில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும்.

அதனால்தான் அவர் சம்பந்தப்பட்ட விஷயங்களை நான் புட்டு புட்டு வைத்துக் கொண்டு இருக்கிறேன். தேர்தல் நேரத்தில் அவர் சம்பந்தப்பட்ட மொத்த விஷயங்களையும் எடுப்போம் என்று பேசியுள்ளார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!