பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிட தயாரா? தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் திடீர் முடிவு!!

Author: Udayachandran RadhaKrishnan
7 March 2024, 5:54 pm

பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிட தயாரா? தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் திடீர் முடிவு!!

உலக மகளிர் தினத்தையொட்டி சென்னை, சி.ஐ.டி காலனி பகுதியில் உள்ள கவிக்கோ மன்றத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மகளிரணி சார்பில் நடைபெறும் மகளிர் தின நிகழ்ச்சியில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் 15 துறைகளில் சிறந்து விளங்கிய மகளிர்க்கு தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக விருது வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பெண்களுக்கான திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து தனிக்கவனம் செலுத்தி வருகிறது.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றத் தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் நேற்று வரை பெறப்ப்பட்டன. பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தேர்தலில் நிற்க ஆர்வம் காட்டியதால் இன்றும் விருப்ப மனுக்கள் பெறுவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கான தேர்தல் குழு அறிவிப்பு இன்று வெளியிடப்பட உள்ளது. தேர்தல் குழுவானது பாஜக தேர்தல் குழுவோடு ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்படும்.

சைக்கிள் சின்னம் தமிழ் மாநில காங்கிரசின் வெற்றின் சின்னம் முக்கிய சின்னம் அதனை பெறுவதற்கான ஆக்கப்பூர்வமான பணிகளை தேர்தல் ஆணையத்தை அணுகி மேற்கொண்டு வருகிறோம்.கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போதுக்கூட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தனிச்சின்னத்தில்தான் போட்டியிட்டது.

புதுச்சேரி சிறுமி பலாத்கார விவகாரத்தில் புதுச்சேரியில் நடந்திருப்பது மட்டும் தனியாக பார்க்க தேவையில்லை. உலகளவில் இந்தியாவில் எந்த இடத்திலும் இத்தகைய சம்பவங்கள் நடப்பது கண்டிக்கத்தக்கது. அவ்வாறு, நடக்கும் குற்றங்களின் முதல் விசாரணையில் குற்றவாளிகள் உறுதி செய்யப்பட்டால் அவர்களை தூக்கிலிட வேண்டும் என பாஜக வலியுறுத்துகிறது.

தேசிய ஜனநாயக கூட்டணியில் கூட்டணிக் கட்சிகள் குறித்து இறுதி முடிவெடுக்க வேண்டியது பாஜகதான். படிப்படியாக பாஜக தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறது.இதர கட்சிகளும் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்ற. பாஜகவின் கூட்டணி முடிவுதான் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இறுதி முடிவு.

சைக்கிள் சின்னம் கிடைக்காத பட்சத்தில் தமிழ் மாநில காங்கிரஸ்க்கு தனக்கென்று ஒதுக்க கூடிய தனிச்சின்னத்தில்தான் போட்டியிடுவோம். கூட்டணியின் முதன்மைக் கட்சி பாஜகதான் கூட்டணிக் குறித்தான முடிவுகளை பாஜகதான் எடுக்கும் எனத் தெரிவித்தார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!