ஜம்மு காஷ்மீர் தனிநாடு… பள்ளி தேர்வில் கேட்கப்பட்ட கேள்வியால் சர்ச்சை… விசாரணைக்கு உத்தரவிட எதிர்கட்சிகள் கோரிக்கை..!!

Author: Babu Lakshmanan
19 October 2022, 4:57 pm

ஜம்மு காஷ்மீர் தனி நாடு என குறிப்பிடப்பட்டு 7ம் வகுப்பு பள்ளி தேர்வில் கேள்வி கேட்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பீகார் மாநிலத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான பருவ தேர்வுகளை அம்மாநில கல்வி வாரியம் நடத்துகிறது. மேற்கண்ட வகுப்புகளுக்கான வினாத்தாள்களை அரசு கல்வி வாரியமே தயார் செய்து வருகிறது.

இப்படியிருக்கையில், தற்போது நடைபெற்ற 7ம் வகுப்பு தேர்வில் வினாத்தாளில் கேட்கப்பட்டுள்ள வினா ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, கீழ்கண்ட நாடுகளின் மக்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறார்கள் என்று ஒரு கேள்விக்கு, உதாரணமாக சீனாவில் வசிப்பவர்கள் சீனர்கள் என்றால், நேபாளம், இங்கிலாந்து, காஷ்மீர் மற்றும் இந்தியாவில் வசிக்கும் மக்களை எவ்வாறு அழைக்கப்படுவார்கள் எனக் கேட்கப்பட்டிருந்தது. இது தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர் கூறுகையில், “இந்த கேள்வித்தாள் பீகார் கல்வி வாரியத்தின் மூலமாக பெறப்பட்டது. இது முழுக்க முழுக்க மனித தவறு,” எனக் கூறினார். இது குறித்து பதிலளிக்க மாவட்ட கல்வி அதிகாரி மறுத்துவிட்டார்.

அதே நேரத்தில், இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பாஜக உள்ளிட்ட எதிர்கட்சியினர் வலியுறுத்தினர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!