செல்போன் உரையாடலை ஒட்டுக்கேட்கும் சென்னை கமிஷனர்.. பெரிய தொகை கொடுக்கும் திமுக அரசு..? சவுக்கு சங்கர் பகீர் தகவல்

Author: Babu Lakshmanan
28 November 2022, 5:10 pm
Quick Share

செல்போன் உரையாடலை சென்னை மாநகர ஆணையர் சங்கர் ஜிவால் ஒட்டுக் கேட்பதாக சவுக்கு சங்கர் குற்றம்சாட்டியுள்ளார்.

சமீபத்தில் நீதிமன்றம் மற்றும் நீதிபதி குறித்து அவதூறு கருத்து பரப்பியதாக மதுரை உயர்நீதிமன்ற கிளை தாமாக முன்வந்து சவுக்கு சங்கர் மீது கிரிமினல் வழக்குபதிவு செய்து, செப்டம்பர் 15ஆம் தேதி, அவருக்கு 6 மாத கால சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. அதன்படி, சவுக்கு சங்கர் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கிடையே, சவுக்கு சங்கருக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை வழங்கிய 6 மாத கால சிறை தண்டனைக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

அவர் ஜாமீனில் வெளியே வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் மீது மேலும் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, அந்த வழக்குகளில் சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமீன் கிடைத்தது.

இந்த நிலையில், நீதிமன்ற அளித்த நிபந்தனையின் அடிப்படையில், இன்று சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் சவுக்கு சங்கர் கையெழுத்திட்டார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது ;- மாநில உளவுத்துறை மற்றும் சென்னை காவல்துறை 2008ல் நடந்ததை போல, சட்டவிரோதமாக தொலைபேசி ஒட்டுக்கேட்பு நிகழ்வில் ஈடுபட்டு வருவதாக எனக்கு தகவல் கிடைத்தது.

வாட்ஸ்அப்பை இடைமறித்து தகவல்களை பெற சென்னை போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். ஆனால், தற்போது வரையிலும் உலகத்தில் எங்கும் வாட்ஸ்அப்பை இடைமறிக்கும் தொழில்நுட்பம் யாரிடமுமில்லை. எனவே, வாட்ஸ்அப் காலில் யாரிடம் பேசுறிங்க, எவ்வளவு நேரம் பேசுறீங்க என்பதை கண்டறயும் பணியில் மாநில உளவுத்துறை மற்றும் சென்னை காவல்துறை ஈடுபட்டு வருகிறது.

என்னுடன் பேசுபவர்கள் யார், தகவல் கொடுப்பவர்கள் யார் என கண்டறிந்து அவர்களை மிரட்டும் நடவடிக்கையில் சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் மற்றும் உளவுத்துறை கூடுதல் டிஐஜி டேவிட்சன் ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர். இது உச்சநீதிமன்ற வகுத்துள்ள விதிகள் மற்றும் தீர்ப்புகளுக்கு எதிரானது.

தற்போதைய சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், எஸ்பியாக இருந்த போதே, ஒட்டுக்கேட்பு வேலைகளை செய்து வந்துள்ளார். 2007 மற்றும் 2008 காலகட்டத்தில் சங்கர் ஜிவாலின் மனைவி மம்தா ஷர்மா தொலைபேசியை ஒட்டுக்கேட்கும் தனியார் நிறுவனத்தின் இயக்குநராக இருந்தார்.

அந்த நிறுவனத்தின் மூலமாக, 11ம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியில் சட்டவிரோதமாக நூற்றுக்கணக்கானோரின் செல்போன் உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்பட்டு வந்தது. செல்போன் உரையாடலை ஒட்டுக்கேட்பது சங்கர் ஜிவாலின் கை வந்த கலை.

இதனடிப்படையில் தற்போதைய திமுக அரசுக்கு சங்கர் ஜிவால் சொல்லி இருப்பது என்னவென்றால், அரசுக்கு எதிராக யார் என்ன பேசினாலும், பெகாசஸ் போன்ற சாப்ட்வேரைப் பயன்படுத்தி அவர்கள் குறித்த தகவல் பற்றி அரசுக்கு தெரிவிப்பதாகச் சொல்லி, அரசிடம் இருந்து சிறப்பாக நிதி பெற்றுவதாக தெரிய வருகிறது.

சங்கர் ஜிவாலின் இந்த செயல் தனிமனித உரிமை மீறல் மற்றும் உச்சநிதிமன்றத்தின் விதிகளுக்கு எதிரானது, எனக் கூறினார்.

Views: - 415

0

0