மாணவர் கடத்தலில் திடீர் திருப்பம்: இதுதான் காரணம்: அதிர வைத்த பள்ளி….!!

Author: Sudha
14 August 2024, 9:31 am

புதுக்கோட்டை நீதிமன்ற வளாகத்துக்கு எதிரில் அமைந்துள்ளது பிரகதாம்பாள் அரசுப்பள்ளி. இந்த பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவன் மோகனப்பிரியன் வழக்கம் போல பள்ளி முடிந்து வெளியே வரும் போது 2 பேர் அம்மாணவனை கடத்திச் சென்றனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் மாணவனை மீட்டனர்.போலீசார் நடத்திய விசாரணையில் கடத்தப்பட்ட பள்ளி மாணவனை அதே பள்ளியைச் சேர்ந்த மற்றொரு மாணவன் கடத்தியது தெரிய வந்துள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடத்தப்பட்ட12ம் வகுப்பு மாணவனை மீட்டு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அதே பள்ளியில் பயின்று வரும் மற்றொரு மாணவனுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக, அந்த மாணவன் ஆள் வைத்து கடத்தலில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.

சம்பந்தப்பட்ட மாணவனிடம் இனி இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என அதிகாரிகள் கடிதம் எழுதி வாங்கியுள்ளனர்.

  • A famous actress living alone with a director? The secret has been revealed! இயக்குநருடன் தனிக்குடித்தனம் நடத்தும் பிரபல நடிகை? வெளியான ரகசியம்!