தமிழகத்தில் குவியும் வடமாநிலத்தவர்கள்… பாஜக காரணமல்ல.. வேறு யார் தெரியுமா..?
சீமான் பரபரப்பு குற்றச்சாட்டு

Author: Babu Lakshmanan
13 February 2023, 2:31 pm

தமிழகத்தில் வடமாநிலத்தவர் எண்ணிக்கை நாளுக்கு அதிகரிக்க காரணம் யார் என்பது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் சுமார் 2000 பேர் பல்வேறு மாற்று கட்சிகளில் இருந்து விலகியோர், நாம் தமிழர் கட்சியில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் சல்மான் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்திப்பில் பேசிய சீமான் , இஸ்லாமியத்தை எதிர்ப்பதே பாஜகவின் ஒரே கோட்பாடு என தெரிவித்தார். நாம் தமிழர் கட்சி மத்திய, மாநில அரசுகளுக்கு இடையூறாக உள்ளது என அவர்கள் நினைப்பதாகவும், அது உண்மைதான் எனவும் எனக் கூறிய அவர், நான் இருக்கும் வரை எட்டு வழி சாலை, பரந்தூர் விமான நிலையம் பேனாச்சின்னம் உள்ளிட்ட எதையும் அமைக்க முடியாது என தெரிவித்தார்.

தமிழ் மக்களுக்கான அரசாக தற்போதைய தமிழக அரசு செயல்படவில்லை என்ன கடுமையாக குற்றம் சாட்டி பேசிய அவர், வட மாநிலத்தவரின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்ததற்கு காரணம் திராவிட இயக்கங்கள் தான் என்றும், வடமாநிலத்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பே, தமிழகத்தில் குற்றங்கள் அதிகரிக்கக் காரணம் என தெரிவித்தார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!