விஜய்யால் கட்சியின் கூடாரம் காலியாகிறதா? காங்கிரஸ் தலைவர்கள் அடுத்தடுத்து பதில்!

Author: Hariharasudhan
5 November 2024, 4:55 pm

விஜய்யின் அரசியல் வருகை சீமான் கட்சியின் கூடாரத்தை காலி செய்துவிடுமோ என்ற நினைப்பில் உள்ளதாக எம்பி மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் விருதுநகர் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், பல்வேறு திட்டப் பணிகளை இன்று (நவ.05) தொடங்கி வைத்தார். இதனையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம் நடிகர் விஜயின் அரசியல் நிலைப்பாடு குறித்து சீமானின் கருத்து தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், “விஜய்யின் அரசியல் வருகையால் சீமானுக்கு பெரும் இழப்பு ஏற்படும் என்பது நேரடியாக தெரிந்துவிட்டது. எனவே தான், விஜய் பற்றி சீமான் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். விஜய்யின் வருகை தனது கட்சி கூடாரத்தை காலி செய்து விடுமோ என்ற அச்சம் சீமானுக்கு ஏற்பட்டு உள்ளது.

Seemanntk

ஒருமுறை மட்டும் வாக்களித்துவிட்டு, மறுமுறை வேறு அரசியல் கட்சிக்கு வாக்களிப்பவர்களுக்காக பேசும் பேச்சாளராக தான் சீமான் விளங்குகிறார் எப்பொழுதுமே புதிய கட்சி தொடங்குபவர்கள், ஆளுங்கட்சியை விமர்சனம் செய்வது வழக்கம்.

அந்த வகையில் தான் விஜய் தற்போது ஆளுங்கட்சியை (திமுக) விமர்சனம் செய்து வருகிறார். அவரது விமர்சனத்தை மக்கள் ஏற்றுக் கொள்வார்களா இல்லையா என்பதை இனிதான் முடிவு செய்ய முடியும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: நடிகை கஸ்தூரியை கைது பண்ணுங்க… குவியும் புகார் ; திணறும் போலீசார்.!!

மேலும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “திமுக – காங்கிரஸ் கூட்டணி வலிமையாக உள்ளது. யாராலும் இந்தியா கூட்டணியை சிதைக்க முடியாது” என்றார். முன்னதாக, காங்கிரஸ் – தவெக கூட்டணிக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியான நிலையில், செல்வப்பெருந்தகை திட்டவட்டமாக அதனை மறுத்துள்ளார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!