செந்தில்பாலாஜி கைது… டிஐஜி தற்கொலை : சந்தேகத்தை கிளப்பும் அண்ணாமலை?!!

Author: Udayachandran RadhaKrishnan
7 July 2023, 5:00 pm

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, டிஐஜி விஜயகுமார் தற்பொழுது நம்முடன் இல்லை என்ற செய்தி அனைவரும் மத்தியிலும் துக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதே காவல்துறையில் நானும் ஒன்பது ஆண்டு காலம் பணியாற்றியுள்ளேன் என்று நினைக்கின்ற போது எனக்கு துக்கம் என்பது இன்னும் அதிகமாக உள்ளது.

விஜயகுமார் மீது பாஜகவினர், இப்பகுதி மக்கள், மாற்றுக் கட்சியினர் என அனைவரும் மிகுந்த மரியாதை வைத்திருந்தார்கள். ஏழை எளிய மக்களுக்கு மிகவும் நெருங்கிய அதிகாரியாக அவர் பணிபுரிந்துள்ளார் என பலரும் கூறுகிறார்கள்.

தற்பொழுது வேறு மாநிலங்களில் நடப்பது தற்பொழுது தமிழகத்திற்குள்ளும் நடக்க துவங்கி உள்ளது. மத்திய பாதுகாப்பு படை பிரிவில் Suicide by Officers பார்த்திருப்போம், குறிப்பாக நார்ஜன் பகுதியில் அதிகாரிகள் அவர்களது துப்பாக்கியை கொண்டு தற்கொலை செய்து கொள்வதை பார்த்திருக்கிறோம். தற்போது தமிழகத்தில் முதல்முறையாக இதனை பார்க்கிறோம்.

இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் கூட பொதுப்படையான காரணங்களை நாங்கள் முன் வைக்கிறோம், காவல்துறையில் இருக்கக்கூடிய பணி அழுத்தம். குறிப்பாக காவல்துறையில் அடிமட்டத்தில் இருக்கும் கான்ஸ்டபிள், ஹெட் கான்ஸ்டபிள், அசிஸ்டன்ட் சப் இன்ஸ்பெக்டர் ஸ்பெஷல் சப் இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் இந்த நிலையில் அவர்களுக்கு இருக்கக்கூடிய மன அழுத்தம் என்பது எந்த ஒரு துறையிலும் இல்லாத ஒரு உச்சகட்ட மன அழுத்தமாக உள்ளது.
அவர்களுக்கு அடுத்தபடியாக உள்ளவர்களின் அழுத்தம் என்பது வேறுபடியான அழுத்தம். அரசியல் கட்சி என்று வரும் பொழுது ஒரு வகையான மன அழுத்தம் வரும், டிரான்ஸ்பர்கள் ஆகியவை காரணங்களாக இருக்கும். காவல்துறையை முதலில் சீரமைக்க வேண்டும்.

காவல்துறையினரின் மன அழுத்தத்தை முதலில் குறைக்க வேண்டும். தமிழகத்தில் காவல்துறையில் தற்போது பத்தாயிரம் காலிப் பணியிடங்கள் உள்ளது. அதனை நிரப்பி விட்டாலே தற்பொழுது உள்ள காவலர்களுக்கான பணி அழுத்தம் என்பது குறையும். எனவே முதலமைச்சர் போர்க்கால அடிப்படையில் இரண்டு ஆண்டுகளில் காவல்துறையில் மொத்தமாக உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

மேலும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் இதற்காகவே முன்னாள் நீதியரசர் சி.டி.செல்வம் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டிருந்தது அந்த குழுவின் அறிக்கை தற்போது வரை வரப்படவில்லை. அதனை பொதுவெளியில் வைத்து அதில் ஏதாவது மேற்கொள்ளப்பட வேண்டிய அவைகள் இருந்தால் அதனை செய்ய வேண்டும்.

உச்சநீதிமன்றத்தில் 2006ம் ஆண்டு நடைமுறைப்படுத்த வேண்டிய சில முக்கியமான விஷயங்களை தீர்ப்பாக அளித்துள்ளதை தமிழக அரசு குழு அமைத்து அதனை மேம்படுத்த வேண்டும். இரண்டு வருடங்களுக்கு ட்ரான்ஸ்ஃபர் வழங்கக் கூடாது, காவலர்கள் பணி செய்யும் இடங்களில் அடிப்படை தேவைகள் இருக்க வேண்டும். டிரான்ஸ்போர்ட் வசதிகள் கழிவறை வசதிகள், ஏற்படுத்தி தர வேண்டும். கட்டாயமாக வார விடுமுறை ஒரு நாள் அளிக்க வேண்டும்.

கர்நாடகாவில் நான் பணி புரியும் பொழுது இதனை கட்டாயமாக பின்பற்றுவோம். மேலும் காவல்துறையில் இருப்பவர்களுக்கு பிளாக் லீவு வழங்கப்பட வேண்டும். நான் காவல்துறையில் பணியில் இருந்த பொழுது 9 ஆண்டுகளில் 20 நாட்களுக்கும் குறைவாகத்தான் லீவு எடுத்துள்ளேன்.

தமிழக காவல்துறைக்கு நற்பெயர் வருவதற்கு 10,000 கோடியை செலவு செய்தாலும் பரவாயில்லை. அதில் என்ன குறைந்து விடப் போகிறது. மூன்று லட்சம் கோடிக்கு மதிப்பிடுகிறோம், அதில் ஒரு பத்தாயிரம் கோடியை காவல்துறை வளர்ச்சிக்கு அளித்தால் நாடு ஒன்றும் தேய்ந்து போகாது.

டி ஐ ஜி விஜயகுமார் மரணம் குறித்து ஸ்பெஷல் இன்வெஸ்டிகேஷன் டீம் அமைத்து ஹைகோர்ட் சூப்பர் விஷன் முன்னிலையில் நடத்தப்பட வேண்டும். விஜயகுமாருக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கும் நடந்த உரையாடல் என்ன அதற்கு முன்பு எந்தெந்த அதிகாரிகளுடன் பேசியிருந்தார் இதுபோன்ற வழக்குகளை இவர் விசாரித்து வந்தார்,
டிஜிபியில் இருந்து அவருக்கும் இவருக்கும் இருந்த உரையாடல் என்ன மன அழுத்தத்திற்கான காரணம் என்ன என்பதை முழுமையாக விசாரிக்க வேண்டும்.உயர் அதிகாரிகள் பேசும் பொழுது கவனம் இருக்க வேண்டும், குடும்பத்தினரின் தனி உரிமை பாதிக்காதவாறு அதிகாரிகள் பேச வேண்டும். இறந்த குடும்பத்தின் வாரிசுக்கு குரூப் ஏ அரசு வேலை கொடுக்க வேண்டும்.

கோவையின் முன்னாள் பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை விசாரணை ஒரு பக்கம் நடந்து வருகிறது இந்நிலையில் இவருடைய தற்கொலை சம்பவம் நடந்துள்ளது எதையும் தொடர்பு செய்து நாங்கள் பேசவில்லை.

விஜயகுமார் தற்கொலை செய்வதற்கான காரணம் என்ன என்பதை கண்டறிய வேண்டும். ஏனென்றால் தற்கொலை செய்யும் மன அளவில் எந்த அதிகாரியும் ஐபிஎஸ் தேர்ச்சி பெற்று வர மாட்டார் ஆனால் அதையும் தாண்டி இதனுள் இருக்கின்ற காரணம் என்ன என்று தெரிய வேண்டும் என தெரிவித்தார்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?