8ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை.. ஆங்கில ஆசிரியரை செருப்பால் அடித்த உறவினர்கள்..!

Author: Udayachandran RadhaKrishnan
9 August 2024, 4:47 pm

ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம் காரம்புடி நகரில் அரசு மாதிரி உயர்நிலைப்பள்ளி உள்ளது. அந்த பள்ளியில் ஆங்கில ஆசிரியராக வேலை செய்பவர் ரவிக்குமார்.

ரவிக்குமார் அதே பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இது பற்றி மாணவி அளித்த தகவல் அடிப்படையில் அந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆகியோர் விளக்குமாறு, தடி ஆகியவற்றுடன் பள்ளிக்கு சென்று ஆங்கில ஆசிரியர் ரவிக்குமாரை தாக்கினர்.

இது பற்றி தகவல் அறிந்த போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது போலீசார் கண் முன்னே ஆசிரியருக்கு மீண்டும் செப்பல் ஷாட் விழுந்தது.

போலீசார் கையில் வைத்திருந்த லாட்டியை பிடுங்கி ஆங்கில ஆசிரியரை சரமாரியாக தாக்கினர். மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆகியோரின் ஆவேசத்தை பார்த்த போலீசார் அவர்களிடமிருந்து ஆசிரியரை காப்பாற்றி சுற்றி மனித அரண் அமைத்து ஓட்டமும் நடையுமாக அவரை தள்ளி சென்று காவல் நிலையத்திற்கு பறந்தனர். அங்கு ஆசிரியரிடம் தீவிர விசாரணை நடத்தப்படுகிறது.

  • shankar have no other films than indian 3 movie ஷங்கரா? அய்யயோ வேண்டாம்?- பிரம்மாண்ட இயக்குனரை ஓரங்கட்டும் டாப் நடிகர்கள்! அடப்பாவமே