சவுக்கு சங்கர் வைத்த கோரிக்கை.. கிடைத்தது க்ரீன் சிக்னல் : நீதிமன்றம் போட்ட உத்தரவு.!!!

Author: Udayachandran RadhaKrishnan
8 August 2024, 7:25 pm

தனக்கு எதிரான 17 வழக்குகளையும் ஒன்றாக சேர்த்து விசாரிக்க உத்தரவிடக் கோரி பிரபல யூ டியூபர் சவுக்கு சவுக்கு சங்கர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணையின்போது, அனைத்து வழக்குகளும் ஒரே சம்பவத்துக்காக பதியப்பட்டதா? என விளக்கமளிக்க காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

வழக்கு விசாரணையின்போது, ஒரு வழக்கில் ஜாமின் வழங்கினால் மற்றொரு வழக்கில் கைது செய்யப்படுவதாக சவுக்கு சங்கர் தரப்பில் வாதம் செய்யப்பட்டது.

அப்போது, அனைத்து வழக்குகளும் ஒரே சம்பவத்துக்காக பதியப்பட்டதா என சரிபார்க்க அவகாசம் வழங்க வேண்டும் னெ காவல் துறை தரப்பு கோரிக்கை வைத்தது.

இந்நிலையில், காவல் துறையின் கோரிக்கையை ஏற்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மேலும், சவுக்கு சங்கரின் மனு மீதான விசாரணை 3 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

  • hans zimmer composing music for ramayana movie starring sai pallavi சாய் பல்லவி படத்தில் இணைந்த கிரிஸ்டோஃபர் நோலன் பட இசையமைப்பாளர்? வெளியான மாஸ் வீடியோ!