இப்படி செய்யலாமா?முறைகேடாக பத்திரப்பதிவு: மாட்டிக்கொண்ட சார்பதிவாளர்; 6 மாத கர்ப்பிணி கைதானது எப்படி..!!
Author: Sudha7 August 2024, 9:18 am
நாகர்கோவில் தோவாளை சார்பதிவாளர் அலுவலகத்தில் சுப்புலட்சுமி என்பவர் பொறுப்பு சார்பதிவாளராக பணிபுரிகிறார். பத்து மாதங்களுக்கு முன், தோவாளை சார்பதிவாளர் மேகலிங்கம் விடுப்பில் சென்றார்.
அதனால் அவரது பணிகளை கவனிக்க சுப்புலட்சுமி பொறுப்பு அலுவலராக நியமிக்கப்பட்டார்.அவர் தலைமையில் பதிவாளர் அலுவலகத்தில் உரிய ஆவணங்கள் இன்றி நிலுவையில் இருந்த நிலம் தொடர்பான பத்திரங்கள் முறைகேடாக பதிவு செய்யப்பட்டன. மறுநாள் பணிக்கு வந்த சார் பதிவாளர் மேகலிங்கம், இதுதொடர்பாக எஸ்.பி.சுந்தரவதனத்திடம் புகார் அளித்தார்.
சைபர் கிரைம் போலீசார் இது குறித்து விசாரித்தனர்.விசாரணையில் மாவட்ட பதிவாளர் அலுவலக உதவியாளர் தனராஜா, 50, உதவியுடன் சார் பதிவாளர் சுப்புலட்சுமி இப்பத்திரங்களை முறைகேடாக பதிவு செய்தது தெரிய வந்தது மேலும் சார்பதிவாளரின் பெயரில் உள்ள லாக் இன் ஐடி மூலம் முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த வழக்கில் முறைகேடாக ஐடி மூலம் முறைகேடு செய்த சுப்புலட்சுமி அதே அலுவலகத்தில் உதவியாளர்களாக பணிபுரியும் தன்ராஜ், நம்பிராஜ் ஒப்பந்த பணியாளர்களான டெல்பின்,ஜெயின் ஷைலா ஆகிய ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.இவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.முறைகேடாக பத்திரப்பதிவு செய்த வழக்கில் கைதாகி உள்ள சுப்புலட்சுமி ஆறு மாத கர்ப்பிணி என்பது குறிப்பிடத்தக்கது.
2
1