ஆக்ஷனில் இறங்கும் லத்திகா சரண் தலைமையிலான குழு : கலாஷேத்ரா பாலியல் விவகாரத்தில் அடுத்தடுத்து அதிரடி!!

Author: Udayachandran RadhaKrishnan
4 April 2023, 9:49 am

உலக அளவில் புகழ் பெற்ற மிகப்பெரிய அறக்கட்டளை நிறுவனமாக கலாஷேத்ராவில் பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

மாணவ-மாணவிகள் 4 தினங்களுக்கு முன்பாக திடீரென உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.மாணவிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய பேராசிரியர்கள் ஹரி பத்மன், சஞ்சித்லால், சாய் கிருஷ்ணன், ஸ்ரீநாத் ஆகியோரை பணி நீக்கம் செய்ய மாணவிகள் வலியுறுத்தியுள்ளனர்.

கலாஷேத்ராவில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக கூறப்பட்ட விவகாரம் சட்டசபையில் எதிரொலித்தது. எம்எல்ஏக்கள் கவன ஈர்ப்பு தீர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினர்.

இதற்கு பதில் அளித்து பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், கலாஷேத்ரா விவகாரம் குறித்து எழுத்துப்பூர்வமான புகார்கள் எதுவும் வரவில்லை. இந்த விசயத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளிடம் மகளிர் ஆணையத்தின் தலைவி குமாரி நேரில் விசாரணை நடத்தினார். 5 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மகளிர் ஆணைய தலைவி, மாணவிகள் நான்கு பேர் மேல் புகார் கூறியுள்ளனர். மாணவிகள் கட்டுக்கட்டாக புகார் அளித்துள்ளனர். நூற்றுக்கணக்கான மாணவிகள் புகார் அளித்துள்ளனர் என்று தெரிவித்தார்.

கலாஷேத்ரா நடனக்கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் பேராசிரியர் ஹரி பத்மனை கைது செய்ய காவல்துறையினர் திட்டமிட்டனர். காவல்துறையினர் தேடுவதை அறிந்து அங்கிருந்து அவர் மாயமானார். இதனையடுத்து தனிப்படை போலீசார் அவரை தேடத்தொடங்கினர். அவரது செல்வோன் சிக்னல்களை கண்காணிக்கத் தொடங்கினர் செல்போன் சிக்னலை வைத்து பெண் தோழி வீட்டில் பதுங்கியிருந்த ஹரிபத்மனை கைது செய்தனர்.

இதனிடையே பாலியல் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபரி கண்ணன் முன்னாள் டிஜிபி லத்திகா சரண், மருத்துவர் ஷோபா வர்த்தமான் ஆகியோர் அடங்கிய விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. மாணவிகளின் கோரிக்கையை ஏற்று பாலியல் புகாருக்கு ஆளான பேராசிரியர்களில் ஹரிபத்மன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும், மற்ற மூன்று உதவி ஆசிரியர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளதாகவும் நிர்வாகம் எழுத்துப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த விவகாரம் பூதாகரமாக எழுந்த நிலையில் கலாஷேத்ரா கல்லூரி மாணவிகளுக்கு பேராசிரியர்கள் பாலியல் தொல்லை அளித்த புகார் தொடர்பாக விசாரிக்க விசாரணை குழு அமைக்கப்பட்டிருக்கிறது. ஓய்வுபெற்ற முன்னாள் நீதிபதி கண்ணன் மற்றும் முன்னாள் டிஜிபி லத்திகா சரண் உள்ளிட்டோர் அடங்கிய குழுவை அமைத்தது கலாஷேத்ரா அறக்கட்டளை.

புகாருக்கு உள்ளான பேராசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை ( ஏப்ரல் 5) நடைபெற இருக்கும் பருவத் தேர்வுகளை மாணவர்கள் எழுத வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  • rashmika mandanna first horror movie thama is vampire movie இரத்தக்காட்டேரியாக மாறும் கியூட் நடிகை? ராஷ்மிகா மந்தனாவின் புதிய ஹாரர் படத்தின் கதை இதுதானா?