வரி ஏய்ப்பா? சினிமா தயாரிப்பாளர்கள் அலுவலகங்களில் அடுத்தடுத்து ரெய்டு : பட்டியலில் பிரபல தயாரிப்பாளர்கள்.. அதிர்ச்சியில் திரையுலகம்!!

Author: Udayachandran RadhaKrishnan
2 August 2022, 10:57 am

திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு அலுவலகத்தில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழ் திரைத்துறையில் முன்னணி தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு. இவரது சினிமா தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலகம் சென்னை தி.நகரில் உள்ளது. இந்நிலையில், தி.நகரில் உள்ள சினிமா தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணுவின் அலுவலகத்தில் இன்று வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் வீடு உள்பட அவருக்கு தொடர்புடைய சென்னை, மதுரையில் 40 இடங்களில் இன்று அதிகாலை முதல் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில் தற்போது சினிமா தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அலுவலகத்திலும் சோதனை நடைபெற்று வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவர்களைத் தவிர, ஞானவேல் ராஜா, எஸ்ஆர் பிரபு அலுவலங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. மேலும் லக்ஷ்மணன், மன்னார், சத்யஜோதி தியாகராஜன், சீனு ஆகியோரது பெயர்களும் ஐடி ரெய்டு பட்டியலில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!