சூர்யா சிவா செஞ்சது தப்பு… பாஜக ஒருபோதும் ஏற்காது : அண்ணாமலை எடுத்த அதிரடி நடவடிக்கை!!

Author: Udayachandran RadhaKrishnan
24 November 2022, 9:52 pm
Annamalai - Updatenews360
Quick Share

சென்னை: பாஜகவிலிருந்து திருச்சி சூர்யா சிவா 6 மாதங்களுக்கு தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சக பெண் நிர்வாகி டெய்சி சரணை ஆபாசமாக பேசியதை திருச்சி சூர்யா சிவா ஒப்புக் கொண்டார். கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக அவர் 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்.

பாஜக பொறுப்புகளிலிருந்தும் அவர் விடுவிக்கப்படுகிறார். பொறுப்புகளில் இருந்து மட்டுமே நீக்கம். அவர் பாஜக தொண்டனாக கட்சியின் வளர்ச்சிக்கு பணியாற்றலாம் என அண்ணாமலை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Views: - 79

0

0