இந்தி மொழி குறித்த பேச்சு.. அமைச்சர் பிடிஆர் பேசுனதை போய் பாருங்க : கொந்தளித்த விஜய் சேதுபதி!!

Author: Udayachandran RadhaKrishnan
7 January 2024, 8:04 pm

இந்தி மொழி குறித்த பேச்சு.. அமைச்சர் பிடிஆர் பேசுனதை போய் பாருங்க : கொந்தளித்த விஜய் சேதுபதி!!

மெரி கிறிஸ்துமஸ் படக்குழு, சென்னை நுங்கம்பாக்கத்தில் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியது. அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார் விஜய் சேதுபதி.

அப்போது, சினிமாவிற்கு முன்பு துபாயில் சில காலம் வேலை பார்தேன். அப்போது இந்தி கற்றுக்கொண்டதன் பயன் தற்போது இந்தி படங்களில் நடிக்கும் போது வசனங்கள் பேச உதவுகிறது என்றார்.

அப்போது, செய்தியாளர் ஒருவர் இந்தி பற்றி கேள்வி எழுப்பினார். “75 வருடங்களாக நமது கலாச்சாரம், அரசியல் இந்திக்கு எதிரானது. இன்றைக்கும் ‘இந்தி தெரியாது போடா’ என்று பிரச்சாரம் செய்கிறோம். இந்தி படிக்க வேண்டுமா, வேண்டாமா” எனக் கேள்வி எழுப்பினார்.

உடனடியாக குறுக்கிட்ட விஜய் சேதுபதி, எதுக்கு இந்த கேள்வி, இந்தக் கேள்வியை என்னை மாதிரியான ஆட்களிடம் கேட்டு என்ன செய்யப் போகிறீர்கள்? எனக் கேள்வி எழுப்பினார்.

அதற்கு அந்தச் செய்தியாளர், தமிழ்நாட்டில், இந்தி படிக்க வேண்டாம் என திருப்பித் திருப்பிச் சொல்வார்கள் என்றார். அதற்கு நடிகர் விஜய் சேதுபதி, “இந்தி படிக்க வேண்டாம் என்று யாரும் கூறவில்லை, திணிக்க வேண்டாம் என்று தான் சொல்கிறோம். வித்தியாசம் இருக்கிறது. இங்கு யாருமே இந்தி படிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை.

நீங்கள் கேட்கும் கேள்வியே தவறு இங்கு இந்தி படிப்பவர்கள் படித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அதனை யாரும் தடுக்கவில்லை. இதற்கு நம்ம பிடிஆர் சார் ஒரு இடத்தில் நன்றாக தெளிவாக விளக்கம் கொடுத்திருக்கிறார். அதை பாருங்கள்” எனப் பதில் அளித்தார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!