யோவ்.. பத்திரிகையாளர் போல பேசு.. கட்சிக்காரன் மாதிரி பேசாத : நிருபர்களை மிரட்டிய சீமான்..!!

Author: Udayachandran RadhaKrishnan
27 August 2024, 8:03 pm

தஞ்சை திருவையாறு அருகே நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்

அப்போது செய்தியாளர் ஒருவர் தமிழ்நாடு மற்ற மாநிலத்தை விட ஒப்பிடும் போது வளச்சி அடைந்து இருக்கிறது என கேள்வி அளித்தற்கு சீமான் என்ன தமிழ்நாட்டில் வளர்ச்சி அடைந்திருக்கிறது என கோவமாக மிரட்டும் தொனியில் பதில் அளித்ததால் பத்திரிகையாளர் சந்திப்பில் சிறு சலசலப்பு ஏற்ப்பட்டது.

முதலமைச்சர் மு.க ஸ்டாலிக்கு உடல்நிலை சரியில்லை என்றால் ராஜிவ் காந்தி மருத்துவமனையில் உள்ள படுக்கையில் அவர் படுக்க முடியாதா என கேட்டார்.

இது தான் தமிழ்நாட்டின் வளர்ச்சியா எனவும் குறிப்பிட்டார். இது அவரவருக்கு ஏற்றார் போல் மருத்துவமனையை தேர்ந்தெடுப்பது என மீண்டும் பத்திரிக்கையாளர் பதில் அளிக்க, எது வளர்ச்சி என பத்திரிக்கையாளரை கை நீட்டி மிரட்டும் தொனியில் பேசினார்.

பின்பு முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றார் அதேபோல் ஜெயலலிதா அவர்களும் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றார் இதே போல் கருணாநிதி அவர்களும் காவிரி மருத்துவமனை சென்றார்கள்.

இப்படி இருக்கும் பட்சத்தில் எப்படி வளர்ச்சி அடையும் எனவும் பத்திரிக்கையாளர் மாதிரி பேசவும் திமுக கட்சியாளர்கள் போல் பேசாத என காட்டமாக பதில் தெரிவித்தார் இதனால் அங்கு சிறு சலசலப்பு ஏற்பட்டது.

  • ajith kumar interview on india today after long gap வெகு கால இடைவெளிக்குப் பிறகு டிவி பேட்டியில் தோன்றும் அஜித்! அதிசயம் ஆனால் உண்மை!